#image_title
நடிகர் விஜய் தற்போது அரசியலில் இறங்கி மக்களுக்கு பணி செய்ய வேண்டும் என்று விரும்பி தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை உருவாக்கி இருக்கிறார். வருகிற ஞாயிற்றுக்கிழமை அக்டோபர் 27ஆம் தேதி இந்த கட்சியின் முதல் மாநாடு விக்கிரவாண்டில் மிக பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது.
அதற்கான பணிகளை கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அவர்களும் தொண்டர்களும் தீவிரமாக செய்து வருகின்றனர். 100 அடி கம்பத்தில் த வெ க கட்சி கொடி ஏற்றப்பட இருக்கிறது. மேலும் கட் அவுட்கள் என பரபரப்பாக வேலை நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் இன்று த வெ க கட்சி மாநாடு நடைபெறும் திடலில் வைத்திருந்த கட் அவுட்களில் இந்திய தேசத்தின் பெருந்தலைவர்களின் கட்டவுட் இருக்கிறது. பெருந்தலைவர் காமராஜர், பெரியார், அம்பேத்கார் உள்ளிட்டோர் கட் அவுட்களுடன் வேலுநாச்சியார் மற்றும் அஞ்சலை அம்மாள் கட் அவுட்டும் இருக்கிறது. இந்த அஞ்சலை அம்மாள் யார் அவர் இந்தியாவிற்கு என்ன செய்தார் என்பதை பற்றி இனி காண்போம்.
அஞ்சலை அம்மாள் தமிழ்நாட்டின் இந்திய விடுதலைப் போராளியும் இந்திய சட்டப்பேரவை உறுப்பினரும் ஆக இருந்தவர். கடலூரில் 1890 ஆம் ஆண்டு பிறந்து வளர்ந்த அஞ்சலை அம்மாள் திண்ணை பள்ளிக்கூடத்தில் ஐந்தாம் வகுப்பு வரை கல்வி பயின்றார். அப்போது அக்கால அரசியலும் பிரித்தானிய அடக்கு முறையும் கண்டு கோபம் கொண்டார் அஞ்சலை அம்மாள்.
மகாத்மா காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தில் சேர்ந்து தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கினார் அஞ்சலை அம்மாள். 1921 இல் நடைபெற்ற ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்ற தென்னிந்தியாவின் முதல் பெண்மணி அஞ்சலை அம்மாள் என்ற சிறப்பு இவருக்கு உண்டு. தனது குடும்ப சொத்தாக இருந்த நிலங்களையும் வீட்டையும் விற்று இந்தியாவின் விடுதலைப் போராட்டத்திற்காக பணத்தை செலவு செய்தார். பெண்கள் வீட்டை விட்டு வெளியே வரவே அஞ்சுகிற காலத்தில் அஞ்சலை அம்மாள் பொது வாழ்க்கைக்கு வந்திருப்பது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது என்று பாரதியாரே அஞ்சலை அம்மாளை பாராட்டி இருக்கிறார்.
அதற்கு அடுத்ததாக உப்பு சத்தியாகிரகத்தில் கலந்து கொண்ட அஞ்சலை அம்மாள் கடுமையாக பிரித்தானிய அரசால் தாக்கப்பட்டு காயமடைந்தார். அதன் பின் ஆறு மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டு வேலூர் மத்திய சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டார். அப்போது அவர் ஆறு மாத கர்ப்பிணியாக இருந்தார். நிறைமாதத்தில் சிறை விடுப்பில் வெளிவந்த அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. அதன் பின் 15 நாளான கைக்குழந்தையை வைத்துக்கொண்டு சிறைக்கு சென்று மீதி இரண்டு மாத தண்டனையும் நிறைவு செய்தார் அஞ்சலை அம்மாள்.
இந்திய நாட்டின் சுதந்திர போராட்டத்திற்காக இத்தனை இன்னல்களை அனுபவித்த அஞ்சலை அம்மாளை காந்தியடிகள் தென்னிந்தியாவின் ஜான்சி ராணி என்று அழைத்தார். வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் தீவிரமாக பணியாற்றியவர் அஞ்சலை அம்மாள். இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு மூன்று முறை சென்னை மாகாண சட்டமன்ற உறுப்பினராக கடலூர் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார் அஞ்சலை அம்மாள். 71 வயது வரை தனது வாழ்க்கையை இந்தியாவிற்காகவே அர்ப்பணித்த அஞ்சலை அம்மாள் 1961 ஆம் ஆண்டு காலமானார். இவரது நினைவாகவே அஞ்சலை அம்மாள் கட் அவுட் நடிகர் விஜய் அவர்கள் தனது கட்சி மாநாட்டு திடலில் அமைத்தது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டுக்காக காத்திருக்கும் விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி, சுமார் 6 லட்சம்…
தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தவெக ஆட்சிக்கவிழ்ப்பு சதி வழக்கில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும்…
தமிழக அரசியல் களத்தில் பெரும் புயலைக் கிளப்பும் வகையில், தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களை (MLA) தங்களது கட்சிக்கு இழுக்க தலா…
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே, தனியாக வசித்து வந்த 60 வயது மூதாட்டி ஒருவரை 23 வயது இளைஞர் பாலியல்…
உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் மாவட்டத்தில், சொத்து தகராறு காரணமாக சமூக வலைதள பிரபலமும் அழகுக்கலை நிபுணருமான நிஷா சவுகான்…
திருப்பூர் ஊத்துக்குளி சாலை, கருமாரபாளையம் அருகேயுள்ள மூகாம்பிகை நகர் பகுதியில், காதலித்து கரம் பிடித்த மனைவியை கணவனே அடித்துக் கொலை…