ஸ்ரீவைகுண்டம் சட்டமன்றத் தொகுதி தமிழக வெற்றிக் கழக எம்.எல்.ஏ. சரவணனை அவரது பதவியை ராஜினாமா செய்யக்கோரி, சுமார் 50 கோடி ரூபாய் வரை பேரம் பேசப்பட்டதாக எழுந்துள்ள விவகாரம் தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. ராதாகிருஷ்ணன் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் எனத் தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், எம்.எல்.ஏ. சரவணன் வசம் உள்ள ஆடியோ ஆதாரங்களை காவல்துறையினர் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.
அத்துடன், இந்த விவகாரத்தில் தமிழக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தனக்கு நேரடியாக மிரட்டல் விடுத்ததாக சரவணன் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளதால், அது குறித்து தனியாக ஒரு வழக்கைப் பதிவு செய்து விசாரிக்கவும் போலீசார் திட்டமிட்டு வருகின்றனர்; இந்த அடுத்தடுத்த அதிரடி திருப்பங்களால் தூத்துக்குடி மாவட்ட அரசியல் களம் தற்போது அனல்பறக்கத் தொடங்கியுள்ளது.
