அனிருத்தால் கீழே இறங்கும் வெற்றி நாயகனின் வளர்ச்சி.. மொத்தமாக மண்ணை அள்ளி போட்ட ராக் ஸ்டார்..

By Mahalakshmi on ஆடி 16, 2024

Spread the love

நடிகர் கவின் திரைப்படத்தில் இசையமைப்பாளர் அனிருத்தால் சில பிரச்சனைகள் எழுந்துள்ளது.

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் கவின். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இவரது வாழ்க்கை ஓஹோன்னு மாறிவிட்டது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளிவந்தவுடன் லிப்ட் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் நல்ல வரவேற்பு கொடுத்ததை தொடர்ந்து டாடா திரைப்படத்தில் நடித்தார். இப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டு கொடுத்தது.

   

   

இதனால் தமிழ் சினிமாவில் தெரியக்கூடிய ஒரு நடிகராக மாறினார். அதையடுத்து ஸ்டார் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் சுமாரான வெற்றியை கொடுத்த நிலையில் தற்போது கைவசம் இரண்டு திரைப்படங்களை வைத்திருக்கின்றார். வெற்றிமாறன் எழுதியிருக்கும் கதையில் ஒரு திரைப்படத்திலும் நடன இயக்குனர் சதீஷ் இயக்கத்தின் ஒரு திரைப்படத்திலும் நடித்து வருகின்றார்.

 

அது மட்டும் இல்லாமல் நெல்சன் தயாரிப்பிலும் ப்ளடி பக்கர் என்ற திரைப்படத்திலும் நடித்து வருகின்றார். இப்படி கைவசம் மூன்று திரைப்படங்களை வைத்திருக்கின்றார். டான்ஸ் மாஸ்டர் சதீஷ் இயக்கும் திரைப்படத்திற்கு கிஸ் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தை ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறார்கள்.

இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வரும் நிலையில் இப்படத்திற்கான பாடலை அவர் இசையமைத்து தருவதற்கு காலதாமதம் ஆகி வருகின்றதாம். பொதுவாக அனிருத் பல திரைப்படங்களில் கமிட்டாகி இருப்பதாலும் சில சமயங்கள் கான்செப்ட் என்று வெளியூருக்கு பறந்து விடுவதாலும் திரைப்படங்களுக்கு இசையமைப்பதில் பல சிக்கல்கள் ஏற்படுகின்றது.

அதேபோல்தான் தற்போது இந்த திரைப்படத்திற்கு ஒரு பிரச்சனை எழுந்துள்ளது. ஏற்கனவே தயாரிப்பாளர்கள் கடன் வாங்கி இந்த திரைப்படத்தை தயாரிக்க முற்பட்டு உள்ளதால் லட்சக்கணக்கில் லாஸ் ஆகும் என்று பயந்து போய் இருக்கிறார்கள். எப்போது அனிருத் வருவார் பாட்டு எப்போது ரெடியாகும் என்று காத்து கிடக்கிறார்கள்.