இன்று தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் பெறும் இசையமைப்பாளராகவும், முன்னணி நட்சத்திரங்களான ரஜினி, விஜய், அஜித், கமல் போன்ற அனைவரின் படங்களுக்கும் இசையமைப்பவராகவும் இருப்பவர் அனிருத். நடிகர் தனுஷின் ‘3’ திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான இவர், மிக குறுகிய காலத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி எனப் பல மொழிகளிலும் தனது முத்திரையைப் பதித்தார்.
இசையமைப்பாளராக அனிருத் அடைந்த வெற்றிகளுக்கு மத்தியில், அவரது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் திருமணம் குறித்த வதந்திகள் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் விவாதிக்கப்படுகின்றன. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தே ஒருமுறை, அனிருத்தை ஏராளமான பெண்கள் பின்தொடர்வதாக வேடிக்கையாகக் குறிப்பிட்டிருந்தார். சன் பிக்சர்ஸ் நிறுவனத் தலைவர் கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறனை அனிருத் திருமணம் செய்யவிருப்பதாக முன்னர் ஒரு தகவல் வெளியானது. அது வெறும் வதந்தி என்று மறுக்கப்பட்ட பின்னரும், அவர்களைப் பற்றிய கிசுகிசுக்கள் தொடர்ந்து வெளியாகி வந்தன.
இந்தச் சூழலில், அனிருத்தும் காவ்யா மாறனும் அமெரிக்காவில் ஒன்றாக இருக்கும் காணொளி ஒன்று தற்போது சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இருவரும் உண்மையிலேயே காதல் உறவில் இருக்கிறார்களா என்று ரசிகர்களிடையே சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
Bro Caught On 4K Got Real 🤯 #AnirudhRavichander #KavyaMaran pic.twitter.com/opPWkLcpV9
— Sadiq Basha (@SadiqBasha_) November 13, 2025
