“ஜெயிலர் 2 ரிலீஸுக்கு அப்புறம் கிராண்ட் வெட்டிங்…” கசிந்த அனிருத்-காவ்யா மாறன் திருமண தேதி…? இந்த நாட்டில் தான் நடக்குதா…? வெளியான லேட்டஸ்ட் அப்டேட்…!!

By Devi Ramu on ஆவணி 18, 2026

Spread the love

தமிழ் திரையுலகின் பிரபல இசையமைப்பாளர் அனிருத் மற்றும் சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறன் இருவரும் காதலித்து வருவதாகவும், விரைவில் திருமணம் செய்துகொள்ளப் போவதாகவும் இணையத்தில் தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஒய்.ஜி.மகேந்திரன் அளித்த பேட்டி ஒன்றுக்குப் பிறகு இவர்களது காதல் விவகாரம் காட்டுத்தீயாகப் பரவிய நிலையில், கலாநிதி மாறன் தயாரிக்கும் படங்களுக்கு அனிருத் தீவிரமாக இசையமைத்து வருவதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர்.

தற்போது அனிருத் – காவ்யா மாறன் திருமணத் தேதி மற்றும் திருமண இடம் குறித்த சுவாரஸ்யமான தகவல்கள் கசிந்துள்ளன. வரும் அக்டோபர் 15-ஆம் தேதி ‘ஜெயிலர் 2’ திரைப்படம் வெளியான பிறகு, நவம்பர் 10-ஆம் தேதி கிரீஸ் நாட்டில் பிரம்மாண்டமாக டெஸ்டினேஷன் வெட்டிங் முறையில் இவர்களது திருமணம் நடைபெறவுள்ளதாகக் கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து திரைத்துறையினர் மற்றும் கிரிக்கெட் நட்சத்திரங்களுக்காகச் சென்னையில் பிரம்மாண்ட வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டாலும், இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.