பிரபல இசையமைப்பாளரான அனிருத் தனுஷ் நடித்த 3 திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். 2011-ஆம் ஆண்டு தனது இசை பயணத்தை தொடங்கிய அனிருத் இன்று முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக உயர்ந்து நிற்கிறார். எதிர்நீச்சல், வேலையில்லா பட்டதாரி, மான் கராத்தே, கத்தி, நானும் ரவுடிதான், விவேகம் உள்ளிட்ட படங்களுக்கு அனிருத் இசை அமைத்துள்ளார். இனிவரும் காலகட்டங்களுக்கும் அனிருத் கைவசம் வைத்துள்ள படங்கள் குறித்து பார்ப்போம்.
டிஜே ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் வேட்டை படத்திற்கு இசையமைக்கிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் நடிக்கும் தலைவர் 121 வது படத்திற்கும் அனிரும் தான் இசையமைக்கிறார். பிரபல இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2, இந்தியன் 3 ஆகிய படங்களுக்கும் அனிருத் இசை அமைக்கிறார்.
மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் நடிக்கும் விடாமுயற்சி படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் 23 வது படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லவ் டுடே பட ஹீரோ பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் LIC படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இயக்குனர் சதீஷ் இயக்கத்தில் கவின் நடிக்கும் நான்காவது படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார்.
இயக்குனர் கொரட்டலா சிவா இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் நடிக்கும் தேவார பார்ட் ஒன் பார்ட் 2 படங்களுக்கு அனிருத் இசை அமைக்கிறார். விஜய தேவர்கொண்டாவின் பன்னிரண்டாவது படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார். கௌதம் தின்னனுரியின் இயக்கத்தில் உருவாகும் மேஜிக் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.