இசைக்கும் கிரிக்கெட்டுக்கும் அடிக்கப் போகுது கல்யாண மணி…. அனிருத் – காவ்யா மாறன் திருமணம் கன்ஃபார்ம்…. வெளிவந்த சீக்ரெட்….!

By Nanthini on ஐப்பசி 17, 2026

Spread the love

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர் அனிருத் மற்றும் சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறனின் மகளும், ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணியின் நிர்வாகியுமான காவ்யா மாறன் ஆகியோருக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் தீயாய் பரவி வருகின்றன. நீண்ட நாட்களாக இவர்கள் இருவரின் காதல் குறித்த கிசுகிசுக்கள் உலா வந்த நிலையில், தற்போது திருமணத் தேதிகளும் வெளிவந்து ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.

முதலில் செஷல்ஸ் நாட்டில் நடத்த திட்டமிடப்பட்ட இவர்களின் திருமணம், பின்னர் அழகிய கடற்கரைகள் மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களைக் கொண்ட கிரீஸ் நாட்டிற்கு மாற்றப்பட்டுள்ளது. வரும் நவம்பர் 11-ம் தேதி கிரீஸில் நெருங்கிய சொந்தங்கள் மற்றும் சினிமா, கிரிக்கெட் உலகைச் சேர்ந்த மிகச் சில விஐபிகள் முன்னிலையில் திருமணம் நடைபெற உள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்காக பிரத்யேகமாக நான்கு தனி விமானங்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

   

வெளிநாட்டில் திருமணத்தை முடித்துவிட்டு சென்னை திரும்பும் தம்பதியினருக்கு, நவம்பர் 21-ம் தேதி நகரின் முன்னணி 5 நட்சத்திர ஓட்டல் ஒன்றில் பிரம்மாண்டமான வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இந்த பிரம்மாண்ட வரவேற்பில் திரையுலக பிரபலங்கள், தொழிலதிபர்கள் மற்றும் முக்கிய அரசியல் தலைவர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

   

இதற்கிடையே, திருமண அழைப்பிதழை வழங்கும் பணிகளும் தீவிரமடைந்துள்ளன. கலாநிதி மாறன் மற்றும் காவேரி மாறன் தம்பதியினர், தெலங்கானா முதலமைச்சர் ஏ. ரேவந்த் ரெட்டியை நேரில் சந்தித்து திருமண வரவேற்புக்கான அழைப்பிதழை வழங்கியுள்ளனர். இந்தத் தகவல்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.