ஐயோ எவ்வளவு கொடுமை… வரதட்சணை கேட்டு மனைவியை எலும்பு கூடாக மாற்றிய கொடூர கணவன்… 2 வருஷமா சாப்பாடு கொடுக்காம… பகீர் கிளப்பும் சம்பவம்…!

Spread the love

ஆந்திர மாநிலத்தில் நடந்த கொடூர சம்பவம் ஒன்று பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. வரதட்சணை சித்திரவதை காரணமாக உயிரிழந்த இளம் பெண்ணின் மரணம் பல பெண்களின் பாதுகாப்பு குறித்த கேள்வியை எழுப்பியுள்ளது. கம்பம் மாவட்டம் கல்லூர் முடிச்சாவரத்தை சேர்ந்த லட்சுமி பிரசன்னா (33) என்பவருக்கு கடந்த 2015 ஆம் ஆண்டு நரேஷ் பாபு என்ற நபருடன் திருமணம் நடந்துள்ளது. திருமணத்தின் போது இரண்டு ஏக்கர் மாந்தோப்பு, ஒரு ஏக்கர் விவசாய நிலம் மற்றும் 10 லட்சம் ரூபாய் பணம் வரதட்சணையாக வழங்கப்பட்டுள்ளது.

இந்த தம்பதிகளுக்கு ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில் ஆரம்பத்தில் ஆறு ஆண்டுகள் மாமியார் வீட்டில் தங்கி இருந்த நரேஷ் பாபு பிறகு தன்னுடைய சகோதரி பூ லட்சுமியின் வீட்டுக்கு மனைவி குழந்தையுடன் சென்று உள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாக லட்சுமி பிரசன்னாவிடம் கூடுதல் வரதட்சனை கேட்டும் உணவு தர மறுத்தும், சூடு வைக்கும் சித்தரவதை செய்து கொடுமைப்படுத்தி உள்ளார். இதன் விளைவாக அவர் உடல் முழுவதும் மெலிந்து எலும்புக்கூடு போல மாறியுள்ளார்.

சமீபத்தில் நரேஷ் பாபு தன்னுடைய மாமனாரை அழைத்து உங்கள் மகள் படிக்கட்டில் இருந்து விழுந்து காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தெரிவித்துள்ளார். பதறி அடித்துக் கொண்டு மருத்துவமனைக்குச் சென்ற பெற்றோருக்கு மகள் உயிரிழந்த செய்தி தான் வந்தது. அவருடைய உடலில் புதியதும் பழையதுமான சூடு வைக்கப்பட்ட தடையங்கள் இருந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் போலீசில் புகார் அளித்த நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து நரேஷ் பாபு மற்றும் அவருடைய சகோதரி, தாய் விஜயலட்சுமி ஆகியோரை கைது செய்த விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

அய்யய்யோ… என்ன கொடுமை இது?… 19 வயது வாலிபரை தீடீரென… தூக்கி வீசிய லாரியின் சக்கரம்… நெஞ்சை பதைபதைக்கும் சிசிடிவி காட்சி…!

சிலி நாட்டின் தலைநகரான சாண்டியாகோவில் உள்ள ஒரு பரபரப்பான சாலையில், 19 வயது வாலிபர் ஒருவர் அமைதியாக நடந்து சென்று…

3 minutes ago

ஐயோ… பேருந்து டயரில் சிக்கிய பைக்… மயிரிழையில் உயிர் தப்பிய அதிர்ஷ்டசாலி… கேரளா சாலையில் நடந்த திடுக்கிடும் விபத்து…!!

சாலையோரத்தில் இருந்து எந்தவித முன்னறிவிப்பும் இன்றி, பின்னால் வரும் வாகனங்களை உற்றுநோக்காமல் திடீரென வாகனங்களை இயக்குவது சாலைகளில் அன்றாடம் அரங்கேறும்…

17 minutes ago

திக்… திக்… நான் உங்கள் மகளைக் கொன்றேன்… போனில் மாமியாருக்கு ஷாக் கொடுத்த மாப்பிள்ளை… கர்நாடகாவில் அரங்கேறிய கொடூரம்…!

கர்நாடகாவில் நடந்த ஒரு அதிர்ச்சி சம்பவத்தில், மாப்பிள்ளை ஒருவர் தனது மாமியாரைத் தொலைபேசியில் அழைத்து, "நான் உங்கள் மகளைக் கொன்றேன்"…

39 minutes ago

திக்.. திக்..! பைக் மீது பயங்கர மோதல்… திரும்பி கூட பார்க்காமல் எஸ்கேப் ஆன கார் ஓட்டுநர்… பதறவைக்கும் CCTV காட்சி…!!

கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…

9 மணத்தியாலங்கள் ago

“மகள் போனதும் ஆட்டம் ஆரம்பம்!”… பொறுமை இழந்த மனைவி… கொதித்து எழுந்த கோபம்… கணவன் மீது வீசப்பட்ட சூடான திரவம்… ரத்த உறைய வைக்கும் சம்பவம்…!!

உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…

9 மணத்தியாலங்கள் ago