சின்னத்திரையில் பிரபலமான தொகுப்பாளினியாக வலம் வருபவர் திவ்யதர்ஷினி. DDக்கு என ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். விஜய் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகளில் ஒன்று காபி வித் டிடி இந்த நிகழ்ச்சியை ஏராளமானார் விரும்பி பார்த்தனர். பிற நிகழ்ச்சிகளையும் திவ்யதர்ஷினி தொகுத்து வழங்கினார். விஜய் டிவியின் அடையாளமாகவே ஒரு கட்டத்தில் திவ்யதர்ஷினி மாறினார்.
ஆனால் ஒரு சில காரணங்களால் திவ்யதர்ஷினி விஜய் டிவியில் இருந்து விலகி விட்டார். இப்போது திரைப்பட விழாக்களை திவ்யதர்ஷினி தொகுத்து வழங்குகிறார். சின்னத்திரை மட்டுமல்லாமல் பெரிய திரையிலும் தோன்றியுள்ளார். கமல் தயாரிப்பில் மாதவன் நடித்த நளதமயந்தி படத்தில் திவ்யதர்ஷினி நடித்துள்ளார். ஒரு சில படங்களிலும் சிறு வயதில் நடித்துள்ளார்.
கடைசியாக சுந்தர்.சி இயக்கிய காபி வித் காதல் திரைப்படத்திலும் கௌதம் இயக்கிய துருவ நட்சத்திரம் திரைப்படத்திலும் திவ்யதர்ஷினி நடித்துள்ளார். இதில் துருவ நட்சத்திரம் படம் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திவ்யதர்ஷினி ஸ்ரீகாந்த் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக திவ்யதர்ஷினி தனது கணவரை விட்டு பிரிந்து விட்டார். அதன் பிறகு இப்போது வரை சிங்கிளாகவே வலம் வருகிறார்.
சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் திவ்யதர்ஷினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வலது காலையில் சர்ஜரி செய்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். மேலும் கேப்ஷனில் கூறியதாவது, கடந்த 3 மாதங்களும் எனக்கு சோதனையான காலம் தான். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு எனது வலது காலில் பெரிய அறுவை சிகிச்சை செய்தேன். மொத்தமாக எனது முழங்கால் மாற்று அறுவை சிகிச்சை செய்துள்ளேன்.
கடந்த 10 ஆண்டுகளில் இது 4-வது அறுவை சிகிச்சை. இதுதான் எனது காலுக்கான கடைசி அறுவை சிகிச்சையாக இருக்க வேண்டும் என ஆசைப்பட்டு நம்பிக்கையுடன் பிரார்த்தனை செய்கிறேன். இப்பொழுது வலியில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக முன்னேற்றத்துடன் மீண்டு வருகிறேன். இரண்டு மாத அறுவை சிகிச்சைக்கு பிறகு இப்போது என்னை நேசிப்பவர்களுக்காக இந்த பதிவை போடுகிறேன். இத்தனை ஆண்டு காலமாக எனக்காக வேண்டி ஆதரவளித்தவர்களுக்கு மிகப்பெரிய நன்றி சொல்ல விரும்புகிறேன் என கூறியுள்ளார்.
View this post on Instagram