நடிகர் நடிகைகளை தாண்டி தற்போது சோசியல் மீடியாவில் வரும் தொகுப்பாளின்கள் பலரும் மக்கள் மத்தியில் பிரபலமாகிவிட்டனர். அதன்படி குறுகிய காலகட்டத்தில் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த தொகுப்பாளனி ஏஞ்சலின் யார் என்பது குறித்து இதில் பார்க்கலாம். கடந்த 2002 ஆம் ஆண்டு ஆம் ஆண்டு பிறந்த ஏஞ்சலினுக்கு தற்போது 22 வயது. சோசியல் மீடியாவில் நமக்கு நன்கு அறிமுகமான நடிகர்களை மடக்கி மடக்கி கேள்வி கேட்டு வருகின்றார். ஜெர்னலிசம் படித்துள்ள இவருக்கு சிறுவயதிலிருந்தே அதன் மீது ஆர்வம் இருந்ததால் அதற்காக படித்தார்.
படித்துக் கொண்டிருக்கும் போதே இன்டர்ன்ஷிப்புக்காக சன் டிவிக்கு சென்றுள்ளார். அப்போது சன் மியூசிக் இல் தொகுப்பாளினிக்கான இண்டர்வியூ நடந்துள்ளது. அதில் கலந்து கொண்ட இவர் தேர்வாகி நச்சென்று நான்கு சினிமா செய்திகளை தொகுத்து வழங்கி வந்தார். பிறகு சன் டிவியில் வணக்கம் தமிழா, ரஞ்சிதமே உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய இவர் விஜய் டிவியில் ரியோ உடன் இணைந்து ஜோடி ஆர் யூ ரெடி என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் மேலும் பிரபலமான இவருக்கு என்று தனி ஒரு ரசிகர்கள் கூட்டம் உருவாகியுள்ளது.
இவருக்கு நன்றாக பாட தெரியும் என்பதால் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் ஒரு எபிசோடில் ஒரு பாட்டு பாடி இருந்தார். இவர் விஜய் சேதுபதி, உதயநிதி, பார்த்திபன், விஜய் ஆண்டனி மற்றும் ஜிவி பிரகாஷ் என பல நடிகர்களை சிறப்பு பேட்டி எடுத்தது மட்டுமல்லாமல் திசை வெளியீட்டு விழா உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வருகின்றார். தொகுபாலினியாக அறிமுகமாகி இரண்டு வருடத்திலேயே மிகப் பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ளார்.