திடீர் திருப்பம்… பாமக பக்கம் வண்டியை திருப்பிய விஜய்… அன்புமணி ஓகே, ராமதாசுடன் பேச்சு வார்த்தை… ஷாக்கில் ஸ்டாலின்…!

By Nanthini on மார்கழி 8, 2025

Spread the love

தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக தேர்தல் களத்தில் இறங்கி பணியாற்றி வருகின்றன. அதிமுக மற்றும் திமுக இடையே மட்டும் போட்டி நிலவிய நிலையில் தற்போது தமிழக வெற்றிக்கழகம் மற்றும் நாம் தமிழர் கட்சி என நான்குமுனை போட்டி நிலவுகிறது. குறிப்பாக விஜய் களத்தில் இறங்கியுள்ளதால் 2026 தேர்தல் களம் பரபரப்பாகவே பார்க்கப்படுகிறது. அதிலும் சமீபத்தில் அதிமுகவின் மூத்த தலைவரான செங்கோட்டையன் விஜய் கட்சியில் இணைந்ததால் அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சில முக்கிய நிர்வாகிகளும் விஜய் கட்சியில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தமிழக வெற்றி கழகம் கட்சிக்கு நாளுக்கு நாள் பலம் கூடிக் கொண்டே செல்கிறது.

அதேசமயம் விஜய் தலைமையில் மெகா கூட்டணி உருவாகும் என அரசியல் ஆர்வலர்கள் பலரும் கூறி வருகின்றனர். இதனிடையே பாமக இரண்டாக பிரிந்து இருக்கும் பட்சத்தில் அன்புமணி அதிமுக பக்கமும், ராமதாஸ் திமுக பக்கமும் தன்னுடைய ஆதரவை தெரிவித்து வருகின்றனர். எடப்பாடி பழனிச்சாமி தோற்கடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழக வெற்றிக்கழகம் கட்சியில் இணைந்த செங்கோட்டையன், பாமகவின் ஒரு அணியாவது தமிழக வெற்றி கழகம் கட்சியில் சேர்ந்தால் இபிஎஸ் ஐ தோற்கடிக்க முடியும் என்ற விஜய்க்கு அறிவுரை கூறியுள்ளாராம்.

   

இதனால் முதலில் அதிமுக பக்கம் இருக்கும் அன்புமணியை விஜய் கட்சியில் சேர்ப்பதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக தெரிகிறது. ஆரம்பத்தில் இருந்தே விஜய்க்கு அன்புமணி ஆதரவு தெரிவித்து வருவதால் அவர் எளிதில் விஜய் கட்சியில் சேர்ந்து விடுவார் என தெரிகிறது. இதனால் அடுத்தபடியாக தமிழக வெற்றி கழகம் கட்சியின் அரசியல் எதிரியான திமுகவுடன் ராமதாஸ் இணைவதை தடுக்க அவருடன் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது