பாமகவின் 38வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள தனியார் அரங்கில் சிறப்பாக நடைபெற்றது. கூட்டம் தொடங்கியதும் கடந்த ஓராண்டாக நடைபெற்ற உட்கட்சித் தேர்தல் நடவடிக்கைகள் மற்றும் அமைப்புத் தேர்தல் தொடர்பான அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டன. கட்சியின் விதிகளின்படி பெறப்பட்ட விண்ணப்பங்களைப் பரிசீலித்த தேர்தல் குழு, பாமகவின் தலைவராக அன்புமணி ராமதாஸ் மீண்டும் அதிகாரப்பூர்வமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்தது. மேலும், பொதுச்செயலாளராக வடிவேல் ராவணனும், பொருளாளராக திலகபாமாவும் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டதாகப் பொதுக்குழு உறுப்பினர்கள் முன்னிலையில் தெரிவிக்கப்பட்டது.
தேர்வுக்குப் பின் உரையாற்றிய அன்புமணி ராமதாஸ், தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவருக்குக் கடும் எச்சரிக்கை விடுத்தார். மேகதாது விவகாரத்தில் பாஜகவும் காங்கிரஸும் இணைந்து சூழ்ச்சி செய்து தமிழ்நாட்டிற்கான தண்ணீரைத் தடுத்து வருவதாகக் குற்றம்சாட்டினார். மேலும், துப்பாக்கிச்சூடு, தடியடி என அனைத்தையும் கடந்து வந்த கட்சி பாமக என்றும், ஆக்கப்பூர்வமான அரசியலை முன்னெடுத்துத் தனியாக நின்று பல சட்டமன்ற உறுப்பினர்களை வெற்றி பெறச் செய்துள்ளதாகவும் பெருமிதத்துடன் குறிப்பிட்ட அவர், காங்கிரஸால் தனியாக நின்று ஒரு கவுன்சிலர் கூட ஆக முடியாது என்றும் காரசாரமாக விமர்சித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் குழந்தையைக் கிள்ளிவிடுவதையும், தமிழக காங்கிரஸ் தலைவர் தொட்டிலை ஆட்டுவதையும் போன்ற நாடகத்தை அரங்கேற்றி வருவதாகச் சாடினார். வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி தமிழ்நாடு வரவிருக்கும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, காவிரி மற்றும் மேகதாது விவகாரத்தில் தமிழகத்திற்கு ஆதரவாகப் பேசுவாரா என்ற கேள்வியையும் முன்வைத்தார். பாமகவின் தலைவராக அன்புமணி மீண்டும் பொறுப்பேற்றுள்ள நிலையிலும், அவர் ஆற்றிய இந்த அதிரடி உரை அரசியல் களத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
உத்தராகண்ட் மாநிலத்தில் கங்கோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் இனோவா கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர்…
ராஜஸ்தான் மாநிலத்தில் தீவிரமடைந்து வந்த குடும்பக் கடன் சுமையை சமாளிப்பதற்காக, வீட்டில் வளர்த்து வந்த பசுவை விற்க கணவர் எடுத்த…
சீனாவில் 2013-ஆம் ஆண்டு நடைபெற்ற உலகையே உலுக்கிய ஒன்றரை வயதுக் குழந்தை மீதான கொடூரத் தாக்குதல் சம்பவம் குறித்த விவரங்கள்…
பெங்களூரு யெலஹங்கா பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றில் செவ்வாய்க்கிழமை அன்று அதிர்ச்சியூட்டும் கொலைச் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. கேரள மாநிலத்தைச்…
பத்ராவதியின் நாகசேனா நகரில் பயிற்சி வகுப்பு முடிந்து மிதிவண்டியில் வீடு திரும்பிய 8 வயது சிறுவன் மீது, 17 வயது…
ஹோட்டலின் ஏழாவது மாடியில் எதிர்பாராதவிதமாக நடந்த இந்த சோக சம்பவம், அனைவரையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 26 வயதான ரிஹானா என்ற…