துணை முதலமைச்சர் பதவி?… விஜய்யிடம் அன்புமணி போட்ட அதிரடி கண்டிஷன்… தமிழக அரசியல் களத்தை அதிரவைக்கும் பரபரப்பு தகவல்….!

By Nanthini on ஐப்பசி 10, 2026

Spread the love

தமிழக வெற்றிக் கழகத்தின் அமைச்சரவையில் பாமக இணைய வேண்டுமானால், துணை முதலமைச்சர் பதவி வழங்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்ததாகப் பிரபல வார இதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தகவலைத் தவெகவின் முக்கியத் தலைவர்கள் கட்சியின் தலைவர் விஜய்யின் கவனத்திற்குக் கொண்டு சென்றபோதிலும், அவர் அதற்கு எவ்வித இசைவும் தெரிவிக்கவில்லை எனக் கூறப்படும் விவரங்கள் அரசியல் வட்டாரங்களில் அனலைக் கிளப்பியுள்ளன.

இதற்கிடையே, தவெக கூட்டணியில் பாமக இணைவது குறித்த பரவலான தகவல்களில் எந்தவித உண்மையும் இல்லை என்று அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களிடம் திட்டவட்டமாக மறுத்துப் பேட்டியளித்துள்ளார். எனினும், தேர்தல் களம் சூடுபிடித்து வரும் சூழலில் வெளியாகியுள்ள இந்த உட்கட்சித் தகவல்கள் மற்றும் அரசியல் நகர்வுகள் தமிழக அரசியல் களத்தில் விவாதப் பொருளாக மாறியுள்ளன.