பாமக கட்சியின் நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகனும், கட்சியின் தலைவருமான அன்புமணிக்கு இடையே பனிப்போர் நீடித்து வருகிறது. இந்தசூழலில் தான் கடந்த ஆகஸ்ட் மாதம் 19ம் தேதியன்று தைலாபுரம் தோட்டத்தில் அக்கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு கூடியது. அதில், அன்புமணி மீது 16 குற்றச்சாட்டுகளை முன்வைத்து, ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் விளக்கமளிக்க நோட்டீஸ் அனுப்பியிருந்தது. ஆனால் விளக்கமளிக்கவில்லை. இதனைத்தொடர்ந்து மீண்டும் பாமக ஒழுங்கு நடவடிக்கை குழுவின் குற்றச்சாட்டுகளுக்கு அன்புமணி விளக்கமளிக்க, ராமதாஸ் கெடு விதித்திருந்தார்.
ராமதாஸ் விதித்த கெடு நேற்றோடு நிறைவடைந்தது. ஏற்கனவே விதிக்கப்பட்ட கெடுவில் அன்புமணி அதற்கு விளக்கமளிக்கவில்லை. தற்போது, மீண்டும் கெடு விதித்தும் அதை அன்புமணி கண்டுகொள்ளாமல் இருக்கிறார். அன்புமணி மீது சுமத்தப்பட்ட 16 குற்றச்சாட்டுகளுக்கும் இரண்டு முறை அவகாசம் அளித்து பதிலளிக்காததால், அவை உண்மையானதே, சரியானதே என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதனால் அவரை அக்கட்சியின் பாமக அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்குவதாக அறிவித்துள்ளார்.
உத்திரப்பிரதேசத்தில் கங்கா எக்ஸ்பிரஸ்வேயில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த…
டெல்லியில் போதைப்பொருள் விற்க மறுத்த பூ வியாபாரி பெண்ணைக் கும்பல் ஒன்று லத்தியால் தாக்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிப்…
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நேர்ந்த இருசக்கர வாகன விபத்தில் 13 வயது பரதநாட்டியக் கலைஞர் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த…
மத்திய அரசின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு…
தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…