பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாசுக்கு சென்னையில் உள்ள கிரீம்ஸ் சாலை அப்பல்லோ மருத்துவமனையில் வலது கால் மூட்டில் சிறிய அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டதை அடுத்து, அவர் சிகிச்சைக்குப் பின் பூரண நலமுடன் இன்று வீடு திரும்பியுள்ளார். அறுவை சிகிச்சைக்குப் பிறகு அடுத்த இரண்டு வாரங்களுக்கு மருத்துவர்களின் அறிவுரையின்படி தீவிர உடலியக்கப் பயிற்சி (பிசியோதெரபி) மேற்கொண்டு முழுமையான ஓய்வில் இருக்கும்படி அவர் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்; இதனால் அவர் விரைவில் நலம் பெற்று வழக்கமான மக்கள் சேவையில் ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
