தந்தை ராமதாஸ் இல்லாத நேரம் பார்த்து… வீட்டுக்குள் புகுந்த அன்புமணி… 4-வது முறையாக நடந்த நெகிழ்ச்சியான சம்பவம்..!!

By Soundarya on சித்திரை 13, 2026

Spread the love

பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி ராமதாஸ் இடையே ஏற்பட்டுள்ள மோதலால் கட்சி இரண்டாக உடைந்து, இந்தச் சட்டமன்றத் தேர்தலைத் தனித்தனியாகச் சந்திக்கிறது. அன்புமணி நிறுத்தியுள்ள வேட்பாளர்களுக்கு எதிராக ராமதாஸ் தனது ஆதரவாளர்களைக் களம் இறக்கியுள்ளதோடு, அவர்களுக்கு ஆதரவாகத் தீவிரப் பிரச்சாரமும் செய்து வருகிறார். இந்நிலையில், விழுப்புரம் பகுதியில் பிரச்சாரத்தை முடித்த அன்புமணி, கடலூர் செல்லும் வழியில் தைலாபுரம் தோட்டத்திற்குச் சென்று தனது தாயாரைச் சந்தித்து ஆசி பெற்றுள்ளார்.

ராமதாஸ் பிரச்சாரத்திற்காகச் சேலம் சென்றிருந்த நேரத்தில், அவர் வீட்டில் இல்லாததை அறிந்து இந்தச் சந்திப்பு சுமார் அரை மணி நேரம் நீடித்தது. தந்தை – மகன் இடையேயான மோதலுக்குப் பிறகு அன்புமணி தனது தாயாரைச் சந்திப்பது இது நான்காவது முறையாகும். இதற்கு முன்னதாக, ராமதாஸ் இல்லாத நேரத்தில் வீட்டிற்கு வந்த அன்புமணி, அங்குக் கண்காணிப்பு மற்றும் ஒட்டுக் கேட்கும் கருவிகளை வைத்துச் சென்றதாக ராமதாஸ் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.