திடீர் திருப்பம்..! “ராமதாஸை சேர்க்கக்கூடாது” அன்புமணி போட்ட கண்டிஷன்… 16 தொகுதி ஒதுக்கி அதிமுக – பாமக கூட்டணி ஒப்பந்தம்.?

Spread the love

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் இல்லத்திற்குச் சென்று அவரை நேரில் சந்தித்துப் பேசினார். பாமக நிறுவனர் ராமதாஸை கூட்டணியில் இணைக்கக் கூடாது என்ற நிபந்தனையை அதிமுக தலைமை ஏற்ற பின்னரே இந்தச் சந்திப்பு நிகழ்ந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் அதிமுக கூட்டணியில் பாமக இணைவது உறுதியாகியுள்ளதுடன், பாமகவில் நிலவும் உட்கட்சிப் பூசல்களும் இந்த அரசியல் நகர்வின் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.

தொகுதிப் பங்கீட்டைப் பொறுத்தவரை, கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. ஆனால், இந்த முறை அதிமுக தரப்பில் வெறும் 16 தொகுதிகள் மட்டுமே ஒதுக்க முன்வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. தொகுதிகளின் எண்ணிக்கை குறைந்தாலும், அதற்குப் பதிலாக ஒரு ராஜ்யசபா (மாநிலங்களவை) இடத்தைப் பெற அன்புமணி தரப்பு சம்மதித்துள்ளதாகத் தெரிகிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் இறுதித் தொகுதிப் பட்டியல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Soundarya

Recent Posts

அம்மா, அப்பாக்கு அடி குடுங்க மோடி தாத்தா..! பிரதமரிடம் கியூட் கோரிக்கை வைத்த சிறுமி.. மகிழ்ச்சியில் நெட்டிசன்கள்..!

சமூக ஊடகங்களில் ஒரு சிறிய சிறுமியின் கியூட்டான வீடியோ இணையவாசிகளின் இதயங்களை வென்று வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ஒரு…

10 minutes ago

இபிஎஸ்-ஐ முதல்வராக்க துள்ளிக்குதித்த உதயநிதி..? மே 4-ம் தேதி நடந்தது என்ன..?திமுக, அதிமுக ரகசியத் திட்டத்தை உடைத்த மாணிக்கம் தாகூர்..!

திமுக இளைஞரணி நிர்வாகிகள் கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், பாஜகவின் தொடர் வெற்றிக்கு காங்கிரஸ்தான் காரணம் என்றும், பதவிக்காக ஓடிப்போன…

10 minutes ago

“நல்லா அழுங்க.. உங்க சாயம் வெளுத்துடுச்சு!”.. திமுகவை வெளுத்து வாங்கிய காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாக்கூர்..!!

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு திமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய காங்கிரஸ் கட்சி, தமிழக வெற்றிக் கழகத்துடன் (தவெக)…

38 minutes ago

திமுக – அதிமுகவுக்கு ஒரே நேரத்தில் செக் வைத்த ED!.. 22 மாஜி அமைச்சர்கள்.. சொத்து டூ ஊழல்.. மொத்தமாக லாக் ஆன கழகங்கள்.. கசிந்தது ரகசிய லிஸ்ட்..!!

தமிழ்நாட்டில் கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு திராவிடக் கட்சிகளே மாறி மாறி ஆட்சி…

47 minutes ago

“அப்போ அப்படி.. இப்போ இப்படி.. அப்படியே தலைகீழா மாறிட்டாரே”.. இணையத்தை உலுக்கும் அமைச்சர் கீர்த்தனாவின் அந்த ‘சிரிப்பு’.. வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..!!

தமிழகத்தில் கடந்த சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது திமுக ஆட்சி காலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாகவும், பெண்கள் மற்றும் சிறுமிகளுக்குப்…

56 minutes ago

வீட்டு வாசலில் காத்திருந்த மரணம்.. 20 அடி தூரம் தூக்கி வீசப்பட்ட வழக்கறிஞர்.. ஸ்கார்பியோ கார் ஏற்றி படுகொலை.. பின்னணியில் உள்ள ‘அந்த’ விவகாரம்.. பதறவைக்கும் சிசிடிவி காட்சி..!!

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில், வக்பு வாரிய நில ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக சட்டப் போராட்டம் நடத்தி வந்த 63 வயதான வழக்கறிஞர்…

1 மணத்தியாலம் ago