ஆன்லைனில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்பவர்களுக்கு ரயில்வே நிர்வாகம் புதிய நிபந்தனை ஒன்றை விதித்துள்ளது. டிக்கெட் புக்கிங்கில் நடக்கும் முறைகேடுகளைத் தவிர்க்கும் பொருட்டு, ஐஆர்சிடிசி (IRCTC) கணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பது ஏற்கனவே கட்டாயமாக்கப்பட்டது. இதன் அடுத்தகட்டமாக, தற்போது காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை இணையதளம் வழியாக டிக்கெட் முன்பதிவு செய்ய ஆதார் விவரங்கள் அவசியமாக்கப்பட்டுள்ளன.
ஆதார் இணைக்கப்படாத கணக்குகள் மூலம் தட்கல் சேவைகளைப் பயன்படுத்த முடியாது என்பதோடு, வரும் 12-ஆம் தேதிக்குப் பிறகு இந்த விதிமுறை இன்னும் தீவிரப்படுத்தப்பட உள்ளது. அதாவது, ஆதார் சரிபார்ப்பு முடிந்த பயனர்கள் மட்டுமே குறிப்பிட்ட நேரங்களில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியும். எனவே, கடைசி நேரத் தவிப்புகளைத் தவிர்க்க பயணிகள் தங்களது ரயில்வே கணக்கை உடனடியாக ஆதாருடன் இணைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில், வக்பு வாரிய நில ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக சட்டப் போராட்டம் நடத்தி வந்த 63 வயதான வழக்கறிஞர்…
தமிழக வெற்றிக் கழகம் (தவிக) அண்மையில் புதிய அமைச்சரவையைப் பொறுப்பேற்றுள்ள சூழலில், அக்கட்சியைச் சேர்ந்த அமைச்சர் ஒருவர் செய்தியாளர்கள் சந்திப்பில்…
சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சமீபகாலமாக ஏற்பட்டு வரும் மின்வெட்டு காரணமாகப் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.…
இந்தியாவில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், நாடு முழுவதும் கடும் வெயில் காரணமாக ஏற்பட்ட…
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் திமுக இளைஞரணியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய திமுக இளைஞரணிச் செயலாளரும்,…
தமிழக அரசியலில் எப்போதும் எதிர்பாராத திருப்பங்களுக்குப் பஞ்சமிருக்காது. அந்த வகையில், தமிழக முதல்வர் விஜய்யை சந்தித்து, அவருடைய தமிழக வெற்றிக்…