திருச்சி பொன்மலையில் நடைபெற்ற தி.மு.க. ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய இளம்பெண் நிர்வாகி ஒருவர், தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகளைச் சிலர் ‘ரீல்ஸ்’ என்ற பெயரில் சமூக ஊடகங்களில் கிண்டலாகப் பகிர்ந்து வருவதாகக் கண்ணீர் மல்கக் குற்றம்சாட்டினார். மாபெரும் தலைவர்கள் கண்ணியம் காத்த சட்டமன்றத்தையும், பாரம்பரியமிக்க தமிழ் சமூகத்தையும் வெறும் சமூக ஊடக மோகத்திற்காக இப்படித் தரம் தாழ்த்துவது வேதனையளிப்பதாக உணர்ச்சிவசப்பட்டுப் பேசினார்.
இளம்பெண்ணின் உணர்ச்சிப்பூர்வமான பேச்சைக் கேட்ட முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவருக்கு ஆறுதல் கூறினார். சமூக ஊடக மோகத்தால் தடம் மாறும் இளைஞர்களும் நமது பிள்ளைகளே என்று குறிப்பிட்ட அவர், அவர்களின் ஆதங்கம் நியாயமானது என்றும், இளைஞர்களுக்குச் சட்டமன்றத்தின் கண்ணியத்தையும் பண்பாட்டையும் எடுத்துச் சொல்லி அன்போடு திருத்துவோம் என்றும் உறுதியளித்தார்.
முன்னதாக, சட்டசபைக் கூட்டத்தொடரின் போது தமிழக முதல்வர் விஜய் “அப்பாவ காணோம்” என்று கூறியதுடன் ‘பினிஷ்டு’ என்பதைக் குறிக்கும் வகையில் சைகை செய்தார். இந்தச் சைகை விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் டைட்டில் கார்டிலும் இடம்பெற்று இணையத்தில் டிரெண்டானது. இந்தச் சம்பவத்தைக் குறிப்பிட்டே அந்த இளம்பெண் தனது கவலையைப் பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்ஸ்டா பிரபலம் 'வாட்டர் மெலன் ஸ்டார்' திவாகர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியவை தற்போது சமூக…
திமுக தலைவர் ஸ்டாலின் குடும்பத்தினரிடையே கட்சி பொறுப்புகளை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வது தொடர்பாக சலசலப்பு ஏற்பட்டுள்ளதாக தனியார் நாளிதழ்…
திண்டுக்கல் மாவட்ட திமுகவின் முக்கியத் தூண்களில் ஒருவராக விளங்கிய மாநில நிர்வாகி வி.ஜெயன், கட்சியிலிருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்துள்ளார். திமுகவின்…
வரும் அக்டோபர் 23-ம் தேதி உருவாகவிருக்கும் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது மேலும் வலுவடைந்து புயலாக மாறுவதற்கு அதிக வாய்ப்புள்ளதாக…
சிவகங்கை மாவட்டத்தில் சரித்திரப் பதிவேட்டுக் குற்றவாளியான 'சுள்ளான் மதன்' கடந்த அக்டோபர் 18-ம் தேதி மர்மக் கும்பலால் கரும்புத் தோட்டத்தில்…
இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI) தொடர்பான வாடிக்கையாளர் தரவு கசிவு குறித்த செய்தி…