ஆசிரியர் தகுதி தேர்வு தொடர்பாக உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு வழங்கியுள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் ஆசிரியர்களின் பணியானது கேள்விக்குறியாகியுள்ளது. இந்நிலையில் இது குறித்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது ஆசிரியர் பணியில் தொடர தகுதி தேர்வு கட்டாயம் என்ற தீர்ப்பு குறித்து ஆசிரியர்கள் அச்சப்பட தேவையில்லை. முதலமைச்சர் தலைமையிலான அரசு ஆசிரியர்களை ஒருபோதும் கைவிடாது” என்று கூறியுள்ளார்.
