கரூர் துயரத்தின் போது அழுதது ஏன்.? முதலில் இதை தெரிஞ்சிக்கோங்க… அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்…!!

By Soundarya on ஐப்பசி 23, 2025

Spread the love

செய்தியாளர்களை சந்தித்து பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், “மழை நீர் பள்ளி வளாகங்களில் தேங்கியிருந்தால் அதை உடனடியாக அகற்ற தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளிகளில் மின்கசிவு ஏதேனும் உள்ளதா என்று ஆய்வு செய்ய வேண்டும். மழைக்காலத்தில் விடுமுறை அளிப்பதற்கு அந்தந்த மாவட்ட கலெக்டர்களுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது .கரூர் சம்பவத்தின் துயரால் நான் அழுதேன். அது சம்பந்தமான வீடியோ காட்சிகளை விமர்சித்தவர்கள் குறித்து கேட்கிறீர்கள்.

உணர்ச்சிகளும், அறிவு சார்ந்து சமமான பேச்சுக்கள் அமைந்துவிட வேண்டும். இது பேச்சாளர்களுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழ் இனத்திற்கும் எடுத்துக்காட்டாக சொல்லலாம். உணர்ச்சிகள் அதிகமாகி அறிவு குன்றி இருந்தால் விலங்குகளுக்கு சமமானது. அறிவு அதிகமாகி உணர்ச்சிகள் குன்றியிருந்தால் மரத்திற்கு சமமானது என்று வள்ளுவரே கூறியிருக்கிறார். முதலில் நாம் மனிதர்கள் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு கல்லை கடவுளாக மாற்றத் தெரிந்த மனிதன் தன்னை மனிதராக்க மறந்து விட்டான்” என்று கூறியிருக்கிறார்.