Categories: சினிமா

சத்தமில்லாமல் தனது நீண்ட நாள் காதலியை கரம்பிடித்த ‘அன்பே வா’ சீரியல் ஹீரோ… மணப்பெண் இந்த பிரபலமா..? வைரலாகும் வெட்டிங் போட்டோஸ்…

Spread the love

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு பெற்று வரும் தொடர் ‘அன்பே வா’ .  இந்த சீரியல் ஹீரோ வருணின் நிஜப் பெயர் விராட். கர்நாடக மாநிலம் ஹுப்ளியை சேர்ந்தவர். பெங்களூருவில் உள்ள பிஎச்எஸ் கல்லூரியில் பிஎஸ்சி அனிமேஷன் படித்துள்ளார். 12 ஆம் வகுப்பு படிக்கும்போதே திரைத்துறையில் கால் பதித்தார்.

2006 ஆம் ஆண்டு வெளியான ‘பிளாக்’ என்ற கன்னட படம்தான் இவரது முதல் படம். அந்தப் படத்தில் இரண்டாவது ஹீரோவாக நடித்திருந்தார். பிறகு, ’10th க்ளாஸ் ஏ செக்‌ஷன்’ படத்தில் ஹீரோவாக நடித்தார். இங்கிருந்துதான் இவரது நடிப்புப் பயணம் தொடங்கியது. அதன்பிறகு பட வாய்ப்புகள் குறைந்ததால் கன்னட சின்னத்திரைக்குள் நுழைந்தார்.

கலர்ஸ் தமிழ் சேனலில் 2018ல் ஒளிபரப்பான பேரழகி சீரியலில் ப்ருத்வி கேரக்டரில் நடித்தார். இதைத்தொடர்ந்து சன்டிவியில் ‘அன்பே வா’ சீரியலில் வருண் என்ற கேரக்டரில் பூமிகாவுடன் நடித்து வந்தார். இவர்களது ரொமன்ஸ் சீன்களை பார்க்கவே தனி ரசிகர்கள் பட்டாளமே  உள்ளது. சமூக வலைதளங்களில் இவர்களுக்கு ஏகப்பட்ட ஃபேன்ஸ்கள் உள்ளனர்.

தற்பொழுது இந்த சீரியல் 1000 எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது.  2020-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த சீரியல் தற்போது 4 ஆண்டுகளாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகி, விரைவில் முடிவுக்கு வர உள்ளதாக கூறப்படுகிறது.  சீரியல் முடிந்த கையோடு அந்த தொடரின் நாயகன் விராட்டுக்கு திருமணம் நடைபெற்று இருக்கிறது.

அவர் தனது நீண்ட நாள் காதலியான நவீனா என்பவரை பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டுள்ளார். இவர்களது திருமணம் சென்னை மகாபலிபுரத்தில் நடைபெற்றது. இதில் உறவினர்கள் மற்றும் சின்னத்திரை நடிகர், நடிகைகள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். விராட் – நவீனா ஜோடியின் திருமண புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. ரசிகர்களும், பிரபலங்களும் இத்திருமண ஜோடிக்கு தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். விராட்டின் மனைவி நவீனா மேக்கப் ஆர்டிஸ்ட் ஆக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Begam

Recent Posts

ஆதார் வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. ஜூன் 14-க்குள் இதைச் செய்யாவிட்டால் கட்டணம் வசூலிக்கப்படும்..!!

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI), ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்களின் அடையாள மற்றும் முகவரிச்…

5 மணத்தியாலங்கள் ago

“உலகத்தைச் சீரழிக்கும் கொடுங்கோலர்கள்” வளங்களைச் சுரண்டி ஆயுதங்களில் முதலீடு… டொனால்ட் ட்ரம்பை மறைமுகமாகச் சாடிய போப்..!!

உலக நாடுகளின் இயற்கை வளங்களைச் சுரண்டி, அந்தப் பணத்தை மக்கள் நலனுக்குப் பயன்படுத்தாமல் ஆயுதங்களில் முதலீடு செய்யும் உலகத் தலைவர்களைப்…

5 மணத்தியாலங்கள் ago

“பிளான் பி” தயாரா…? எடப்பாடி தொகுதியில் விஜய்யின் அடுத்த மூவ் என்ன…? கலக்கத்தில் அதிமுக…!!

சேலம் மாவட்டத்தின் நட்சத்திரத் தொகுதியான எடப்பாடியில், வரும் ஏப்ரல் 23 சட்டமன்றத் தேர்தலில் சுமார் 61,000 இளம் வாக்காளர்கள் வெற்றியாளரைத்…

7 மணத்தியாலங்கள் ago

ஐஐஐடி படிப்பு.. ஆண்டுக்கு 17 லட்சம் சம்பளம்…. ஆனாலும் வேலையை விட்டது ஏன்….? வைரலாகும் இளைஞரின் உருக்கமான பதிவு…!!

டெல்லி ஐஐஐடியில் பட்டம் பெற்ற 24 வயது இளைஞர் சிராஜ் மதன், ஆண்டுக்கு 17 லட்சம் ரூபாய் ஊதியம் தரும்…

7 மணத்தியாலங்கள் ago

இன்னும் ஒரு வாரம் தான் டைம்…. எனக்காக இதைச் செய்யுங்க…! பெண்களுக்கு விஜய் விடுத்த ‘விசில்’ கோரிக்கை…!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான விரிவான தேர்தல் அறிக்கையை இன்று சென்னையில் வெளியிட்டார். திருக்குறளின்…

7 மணத்தியாலங்கள் ago

“தீட்டு” – உயிரை விட மேலானதா?… என் அம்மாவிற்கு நேர்ந்தது இன்று அந்தப் பெண்ணிற்கு மரணம்… சமூகத்தின் கண்களைத் திறக்கப்போகும் ஒரு பதிவு…!!!

மிகவும் கனமான மற்றும் வேதனையான ஒரு விஷயத்தைப் பகிர்ந்துள்ளீர்கள். ஒரு பூஜை  வழிபாட்டிற்காகத் தனது ஆரோக்கியத்தைப் பணையம் வைத்து, 18…

7 மணத்தியாலங்கள் ago