தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் மீண்டும் நடைபெற்றது. கடந்த முறை கரூரில் நடந்த கூட்ட நெரிசல் சம்பவங்களைத் தவிர்ப்பதற்காக, இந்த முறை மிகக் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. QR கோடு வைத்திருந்தவர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டனர், மேலும் முதியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு அரங்கத்திற்குள் வரத் தடை விதிக்கப்பட்டிருந்தது.
நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன், தவெக பொதுச்செயலாளர் என். ஆனந்த் கல்லூரி வளாகத்தில் வாகனங்களை நேரில் ஆய்வு செய்தார். அப்போது, கைக்குழந்தையுடன் வந்த ஒரு பெண்ணைப் பார்த்த அவர், குழந்தையைப் பாதுகாப்புக் கருதி உள்ளே அனுமதிக்க முடியாது என்று கனிவாக எடுத்துரைத்தார்.
அந்தப் பெண்ணிடம், “குழந்தைய இட்டுனு வராதன்னு சொன்னேன்… சொல்லி மூணு மாசந்தான ஆகுது… கோச்சிக்காத…” என்று கூறிய புஸ்ஸி ஆனந்த், குழந்தையின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளித்தார். குழந்தையை அந்த பெண்ணின் மாமனாரிடம் ஒப்படைக்கச் சொன்னதுடன், நிகழ்ச்சி முடியும் வரை குழந்தையும், தாத்தாவும் தங்குவதற்குத் தனி அறை ஏற்பாடு செய்து, அவர்களைத் தனது காரிலேயே அந்த அறைக்கு அனுப்பி வைத்தார்.
அதேபோல், உள்ளே அனுமதிக்கப்படாத முதியவர்களிடமும் அவர் பேசி, கூட்ட நெரிசலில் அவர்களுக்குச் சிரமம் வரக்கூடாது என்பதற்காகவே இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது என்று விளக்கமளித்துச் சமாதானப்படுத்தினார். பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்து அவர் எடுத்த இந்த மனிதாபிமான நடவடிக்கை அங்கிருந்தவர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
தமிழ்நாடு அரசு விளையாட்டுத் துறையையும், சர்வதேச அரங்கில் பதக்கங்களை வெல்லும் விளையாட்டு வீரர்களையும் ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு சிறப்புத் திட்டங்களைச்…
திரைப்பட இயக்குநரும் நடிகருமான மிஷ்கின், 'டோரதி' என்ற திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு வழக்கம்போல தனது அதிரடி கருத்துகளால்…
தமிழக சட்டமன்றத்தில் தவெக அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவரப்படலாம் என்ற சூழல் எழுந்துள்ள நிலையில், கம்யூனிஸ்ட் கட்சிகளின்…
பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரான முத்துக்குமரன் மீது வஹிதா என்ற பெண் உடல் ரீதியான தொடர்பு…
திருவைகுண்டம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் கு. சரவணன் மீது நிதி மோசடி உள்ளிட்ட கடுமையான புகார்கள் கிளம்பியுள்ள நிலையில், இது…
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் நாகோல் பகுதியில் உள்ள 100 அடி சாலை அருகேயுள்ள பாழடைந்த இடத்தில், 9 நாட்களாகக் காணாமல்…