கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை அருகே ஆம்னி பேருந்து கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததில் சுமார் 40 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு, ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளிட்ட அருகிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவத்தால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது
