தன் சொற்ப வருமானத்திலும் கருணை உள்ளத்தோடு ஐந்து தெரு நாய்களை அரவணைத்துச் செல்லும் ஒரு முதியவரின் நெகிழ்ச்சியான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஒரு பழைய ரிக்சாவில் அந்த முதியவர் தனது ஐந்து செல்லப் பிராணிகளுடன் பயணம் செய்யும் காட்சி, பணக்காரர்களை விடவும் அவர் மனதால் பெரும் செல்வந்தர் என்பதை உலகுக்கு உணர்த்தும் வகையில் அமைந்துள்ளது.
அந்த வீடியோவில், அந்த முதியவர் தனது ரிக்சாவை மிதித்துச் செல்ல, அதில் ஐந்து நாய்களும் மிகவும் சமத்தாக அமர்ந்து சவாரி செய்கின்றன. தன்னிடம் பெரிய வசதிகள் இல்லையென்றாலும், ஆதரவற்ற அந்தப் பிராணிகளுக்கு உணவும் பாதுகாப்பும் வழங்கி ஒரு குடும்பம் போல அவர் கவனித்துக் கொள்வது பார்ப்பவர் கண்களைக் குளிரச் செய்கிறது. “உண்மையான செல்வம் என்பது பணத்தில் இல்லை, பிற உயிர்களிடத்தில் காட்டும் அன்பில்தான் இருக்கிறது” என்பதற்கு இந்த முதியவர் சிறந்த உதாரணமாகத் திகழ்கிறார்.
View this post on Instagram
இந்தக் காணொளியை இணையத்தில் கண்ட லட்சக்கணக்கான மக்கள், அந்த முதியவரின் பெருந்தன்மையைப் பாராட்டி வருகின்றனர். “கோடிக்கணக்கான பணம் வைத்திருப்பவர்களிடம் இல்லாத நிம்மதியும் அன்பும் இவரிடம் இருக்கிறது” என நெட்டிசன்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். மனிதநேயம் மங்கி வரும் இன்றைய காலத்தில், இந்த முதியவரின் செயல் ஒரு மாபெரும் நம்பிக்கையை விதைத்துள்ளது.
