வாஸ்து காரணமா?… சீக்ரெட் பிளானா?… உச்சத்தில் இருக்க உயரமான இடத்தில் அலுவலகம்… முதல்வர் விஜய்யின் “மாஸ்” ஆபீஸ் டிரான்ஸ்ஃபர்…!

Spread the love

தமிழகத்தில் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். அதிரடி மாற்றங்களுடன் இயங்கி வரும் இந்த ஆட்சியில், தற்போது புனித ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் சுமார் 60 ஆண்டுகால வரலாற்றைக் கொண்ட பிரதான கட்டிடத்தின் முதல் தளத்தில் இயங்கி வந்த முதலமைச்சரின் அலுவலகம், 10 அடுக்கு மாடிகளைக் கொண்ட நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது தளத்திற்கு மாற்றப்பட உள்ளது. அங்கு முதலமைச்சரின் அறையுடன் அவரது 4 முதன்மைச் செயலாளர்களின் அறைகளும் அமையவுள்ளன.

மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர்கள் மாநாடு நடைபெற்று வந்த அரங்கம், தற்போது சர்வதேச தரத்திலான புதிய அலுவலகமாக மாற்றப்படுகிறது. கடல் காட்சியை ரசிக்கும் வகையிலான அமைதி தரும் சூழல், 34 அரசுத் துறைகளின் முதன்மைச் செயலாளர்கள் அதே கட்டிடத்தில் இருப்பதால் அவர்களுடன் நேரடியாகத் தொடர்புகொண்டு பணிகளை விரைவுபடுத்தும் வசதி ஆகியவை இதன் முக்கிய சிறப்புகளாகும். தகவல், தமிழ் வளர்ச்சி மற்றும் வணிக வரித் துறையின் சில பிரிவுகள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டு, ஆகஸ்ட் மாத இறுதிக்குள் இந்த இடமாற்றம் நிறைவடையும் எனக் கூறப்படுகிறது.

அலுவலகம் உச்சத்தில் இருந்தால் ஆட்சியும் உச்சத்தில் இருக்கும் என்ற ஜோதிட / வாஸ்து ரீதியான காரணங்கள் ஒருபுறம் பேசப்பட்டாலும், தலைமைச் செயலகத்தில் நிலவும் இடநெருக்கடி மற்றும் முதலமைச்சரைச் சந்திக்க வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு ஆகியவையே இம்மாற்றத்திற்கான முக்கியக் காரணங்களாகக் சுட்டிக்காட்டப்படுகின்றன. இருப்பினும், பிரதான கட்டிடத்தில் உள்ள பழைய அலுவலகத்தையும் முதலமைச்சர் தொடர்ந்து பயன்படுத்துவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Swetha

Recent Posts

பட்டப்பகலில் பயங்கரம்…! நடந்து சென்ற பெண்களிடம் வேலையை காட்டிய வாலிபர்கள்… இணையத்தில் தீயாய் பரவும் சிசிடிவி காட்சிகள்…!!

தெலங்கானா மாநிலம் ஜன்காமா பகுதியில் உள்ள நெசவாளர் காலனியில் இரண்டு பெண்கள் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, அங்கு சங்கிலி…

14 minutes ago

BREAKING: 5 திமுக MLA-க்கள் ராஜினாமா?….. தவெக விரித்த பனையூர் வலை…. திமுகவை அதிர வைக்கும் ரகசிய ரிப்போர்ட்….!

திமுகவில் மேற்கொள்ளப்பட்டு வரும் உள்கட்டமைப்பு மற்றும் நிர்வாக மாற்றங்களால் சில சட்டமன்ற உறுப்பினர்கள் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படும் நிலையில், அவர்கள்…

18 minutes ago

“வருங்கால PM விஜய்யா? ராகுல் காந்தியா?”…. காங்கிரஸின் அதிரடி முடிவால் தவெக கூட்டணியில் புயல்…. பரபரப்பில் தமிழக அரசியல்…!

எதிர்காலப் பிரதமர் விவகாரம் தொடர்பாகத் தவெக மற்றும் காங்கிரஸ் தலைவர்களிடையே எழுந்துள்ள கருத்து வேறுபாடுகள் அரசியல் களத்தில் விவாதங்களைக் கிளப்பியுள்ளன.…

24 minutes ago

“இப்படி பேச அசிங்கமா இல்லையா?….. நாவடக்கம் தேவை செங்கோட்டையன்”…. கொதித்தெழுந்த மதிமுக… தமிழ்நாடு அரசியலில் திடீர் பரபரப்பு….!

தவெக அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையனின் சமீபத்திய பேச்சுக்கு மறுப்பு தெரிவித்து, மதிமுக பொருளாளர் மு. செந்திலதிபன் காரசாரமான கண்டன அறிக்கை…

29 minutes ago

மகளிருக்கு ஜாக்பாட்…. உரிமைத் தொகையை உயர்த்தும் CM விஜய்?…. அமைச்சர் ஜெகதீஸ்வரி வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!

மத்திய அரசிடம் இருந்து கூடுதல் நிதி ஆதாரங்களைப் பெற்று, மகளிருக்கான உரிமைத் தொகையை முதல்வர் விஜய் உயர்த்தி வழங்குவார் என…

34 minutes ago

“தவெகவுடன் அதிமுக  கூட்டணி…. இணைந்து 3 வாரம் ஆச்சு”…. புதுக்கோட்டையில் கு.ப.கிருஷ்ணன் போட்ட வெடி…. தமிழக அரசியலில் அடுத்த பரபரப்பு…!

"அதிமுக, தமிழக வெற்றிக் கழகத்துடன் இணைந்து மூன்று வாரங்களுக்கு மேலாகிவிட்டது" என்று அதிமுக முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் புதுக்கோட்டையில் செய்தியாளர்களைச்…

39 minutes ago