இந்திய சினிமாவின் பிதாமகங்களில் ஒருவராக இருந்தவர் மிருணாள் சென். மேற்கு வங்கத்தை சேர்ந்த இவர் தனது திரைப்படங்கள் மூலம் பல சமூக கருத்துக்களை விதைத்தவர். இந்திய திரைப்படங்களை உலக தரத்திற்கு கொண்டு சென்றவர்களில் இவரும் ஒருவர். இந்தி, ஒடிசா வங்க மொழிகளில் 30க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கி இருக்கின்றார். இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு டிசம்பர் 30-ம் தேதி கொல்கத்தாவில் உயிரிழந்தார்.

அவர் உயிரிழக்கும் போது வயது 95. இவர் திரைப்படங்களை இயக்கும்போது நடந்த சுவாரசிய சம்பவம் ஒன்றை நடிகரும் மூத்த பத்திரிக்கையாளருமான சித்ரா லட்சுமணன் ஒரு பேட்டியில் பகிர்ந்து இருக்கின்றார். அதில் அவர் தெரிவித்திருந்ததாவது: மிருணாள் சென் எப்படிப்பட்ட வெற்றிகளை குவித்த இயக்குனர் என்பது அனைவருக்கும் தெரியும். அவருடைய ஒரு படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது.
அது ஒரு உச்சகட்ட காட்சி. இந்த காட்சி எப்படி அமைய வேண்டும் என்பதற்காக பல நாட்கள் யோசனை செய்து அதற்குப் பின்னால் அன்றைய தினம் படப்பிடிப்பை தொடங்கினார். எல்லா நடிகர், நடிகைகளுக்கும் அந்த காட்சியைப் பற்றி விளக்கமாக கூறிவிட்டு சென்றார். அப்போது அங்கு வந்த உதவி இயக்குனர், ‘சார், இந்த காட்சி எப்படி அமையப்போது இது எப்படி நீங்க படம் பார்க்க போறீங்க என்பது எனக்கு தெரியும் என்று கூறிய உடன் அதுக்கு என்ன என சொன்னார் மிருணாள் சென்.

இல்ல சார் இந்த காட்சியை இப்படி படமாக்குவதை விட நான் சொல்வது போல் படமாக்கினால் நன்றாக இருக்கும் என்று கூறியிருக்கிறார். மேலும் அதனை நடித்தும் காட்டி இருக்கின்றார். இதை பார்த்த மிருணாள் சென் கடும் கோபமடைந்து உன்னோட வேலையை மட்டும் நீ பாரு என்று சென்று விட்டு அந்த காட்சியை எடுக்க சென்று விட்டார். அப்படி அவர் எடுத்த காட்சி அவருக்கு திருப்திகரமாக இல்லை. உடனே அந்த உதவி இயக்குனரை மீண்டும் அழைத்தார்.
இதனால் பயந்து போன உதவி இயக்குனர் நான் இனிமேல் உங்கள் விஷயத்தில் தலையிட மாட்டேன் என்னை மன்னித்து விடுங்கள் என்று பயந்து கொண்டே பேசினார். உடனே ஒரு நாள் அது இல்லை நான் எடுத்த காட்சி சரியாக வரவில்லை. நீ சொல்லுவது போல் எடுத்தால் சரியாக இருக்கும் என்று எண்ணுகிறேன். அதனால் நீயே இந்த காட்சியை எடுத்து விடு என்று கூறி இருக்கிறார்.

ஒரு நிமிடம் அதிர்ச்சி அடைந்த உதவிய இயக்குனர் என்ன சொல்வது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருந்தார். உண்மையாகவே சொல்லுகிறேன் நீ தான் இந்த காட்சியை எடுக்கப் போகிறாய் என்று கூறிவிட்டு அவரை படத்தை எடுக்க சொல்லி அவரிடம் இருந்த கிளாப் போர்டை தான் எடுத்துக் கொண்டு சென்று அந்த காட்சிக்கு கிளாக் அடித்து தொடங்கி வைத்தார்.
இந்த காட்சி முடிந்தவுடன் அங்கிருந்து அனைவருமே பல நிமிடம் கைதட்டினார்கள். அது அந்த காட்சி நன்றாக வந்ததுக்கு மட்டுமல்லாமல் ஒரு இயக்குனர் உதவி இயக்குனர் எப்படி நடத்த வேண்டும் என்பதற்கு உதாரணமாக திகழ்ந்த மிருணாள் சென் நடந்து கொண்ட விதத்திற்கு தான் அந்த அளவுக்கு கைதட்டல் வந்தது. இந்த சம்பவத்தை சித்ரா லட்சுமணன் பகிர்ந்து இருந்தார்.
