இந்தியாவைச் சேர்ந்த பிரபலமான யூடியூபரான ஆகாங்ஷா மோங்கா, தென்கொரியாவின் சியோல் நகரில் உள்ள மெட்ரோ சுரங்கப்பாதை நிலையத்தில் கண்ட விசித்திரமான மற்றும் பயனுள்ள வசதி ஒன்றைச் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். ரயில் நிலைய தரையில் சிறிய துளைகளுடன் கூடிய பலகைகள் அமைக்கப்பட்டு இருப்பதை ஆரம்பத்தில் பார்த்த அவர், அது எதற்காக என்று புரியாமல் குழப்பமடைந்துள்ளார்.
https://www.instagram.com/reel/DeMGJ9POgQK/?utm_source=ig_web_copy_link&dlrf=NTc4MTIwNjQ2YQ==
பின்னர் தான், மக்கள் அதன் மீது நடந்து செல்லும்போது காலணிகளில் படிந்துள்ள தூசி மற்றும் அழுக்குகளை தானாகவே உறிஞ்சி எடுக்கும் ஷூ கிளீனர் என்பது அவருக்குத் தெரியவந்துள்ளது. தென்கொரியா மக்களின் தூய்மை மற்றும் சின்ன சின்ன விஷயங்களிலும் செலுத்தும் கவனத்தைப் பாராட்டி அவர் பதிவிட்ட இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதேவேளையில், இதுபோன்ற காற்றோட்டம் மற்றும் தூய்மைப்படுத்தும் வசதிகள் டெல்லி மெட்ரோவிலும் இருப்பதாகவும் சிலர் கமெண்ட்டில் சுட்டிக்காட்டி வருகின்றனர்.
