பக்கத்து வீட்டுப் பெண்ணுடன் கள்ளக்காதல்… லாட்ஜில் பிணமாக கிடந்த பெண்… காட்டுக்குள் மரத்தில் தூக்கில் தொங்கிய காதலன்… பெரும் பயங்கர சம்பவம்..!

By Soundarya on மாசி 5, 2026

Spread the love

கண்ணூர் அருகே தனியார் விடுதியில் கள்ளக்காதலியை கொலை செய்துவிட்டு, காதலன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிப்ரவரி 4-ம் தேதி கண்ணூரில் உள்ள ஒரு லாட்ஜில் கே.வி.சீமா என்ற பெண் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். விசாரணையில், அவரது காதலன் விஜயன் என்பவரே சீமாவை கழுத்தை நெரித்துக் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியது  உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து தலைமறைவாக இருந்த விஜயன், அருகில் உள்ள காட்டுப் பகுதியில் மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இவர்கள் இருவரும் நீண்ட காலமாகப் பழகி வந்த பக்கத்து வீட்டுக்காரர்கள் என்பதும், இவர்களிடையே இருந்த கள்ளக்காதல் விவகாரமே இந்த விபரீத முடிவுக்குக் காரணம் என்பதும் காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த போலீசார், இருவரின் உடல்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.