“இதெல்லாம் ஒரு ‘ஒர்த்’-தே இல்லை”… மனைவி சங்கீதா குறித்து பரவிய வதந்தி, மௌனம் கலைத்த தவெக தலைவர்… மகளிர் தின விழாவில் அதிரடி காட்டிய தளபதி…!!!

By Rajeshwari on பங்குனி 7, 2026

Spread the love

சமீபகாலமாக நடிகர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு வதந்திகள் பரவி வந்த நிலையில், அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் விஜய் ஒரு பரபரப்பான உரையை ஆற்றியுள்ளார். சென்னையில் இன்று நடைபெற்ற மகளிர் தின விழாவில் கலந்துகொண்ட அவர், தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்த விவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

மேலும் தனது சொந்த விஷயங்களுக்காக ரசிகர்கள் கவலைப்படத் தேவையில்லை என்றும், அத்தகைய வதந்திகள் பேசி விவாதிக்கும் அளவுக்கு “ஒர்த்” இல்லை என்றும் அவர் மிகத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். தனிப்பட்ட விமர்சனங்களை விட மக்கள் பணிகளுக்கே அதிக முக்கியத்துவம் அளிக்க விரும்புவதாகத் தெரிவித்த விஜய், “நானும், நீங்களும் சேர்ந்து மக்கள் பிரச்சனைகளை மட்டும் பார்ப்போம்” என்று தனது ரசிகர்களுக்கும் தொண்டர்களுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

   

இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராகத் தற்போது தீவிர அரசியலில் இறங்கியுள்ள அவர், இதுபோன்ற தேவையற்ற சர்ச்சைகளில் கவனம் செலுத்தாமல், சமூக நலனில் மட்டுமே தங்களின் கவனம் இருக்க வேண்டும் என்பதை இந்த உரையின் மூலம் உறுதிப்படுத்தியுள்ளார்.