ஆந்திரா மாநிலம் திருப்பதியைச் சேர்ந்தவர் வெங்கட ரமணமூர்த்தி. 71 வயதான முதியவர். இவர் பாரத ஸ்டேட் வங்கியில் மேலாளராக பணி செய்து ஓய்வு பெற்றவர். வெங்கட ரமண மூர்த்தி இதுவரை 3,460 தடவை திருமலை ஏழுமலையான் சுவாமியை தரிசனம் செய்திருக்கிறார். ஏழுமலையானுக்கு சேவை செய்யும் வாய்ப்பாக கருதி திருப்பதி மலைக்கு அலிபிரி நடைபாதையில் 3,250 தடவை நடந்து சென்று சுவாமியை தரிசனம் செய்திருக்கிறார்.
இவர் பணி ஓய்வு பெற்ற பிறகு வாரத்தில் 4 நாட்கள் ஏழுமலையானை தரிசனம் செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறார். அலிபிரி நடைபாதையில் செல்லும்போது கோவிந்தா கோவிந்தா என்ற நாமத்தை உச்சரித்தபடி நடந்து சென்றால் 2,388 படிகளையும் ஒன்றரை மணி நேரத்தில் கடந்து மலைக்கு சென்று விடுவதாக கூறுகிறார். 71 வயதிலும் ஏழுமலையானை தரிசனம் செய்ய அவர் என்னை ஆரோக்கியமாக வைத்திருப்பதாகவும் அவர் நெகிழ்கிறார். இது பெருமாள் பக்தர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
