“ஆசையாக ஊட்டிவிட்ட ‘விஷப் பாயசம்’.. மயங்கிய கணவனின் முகத்தில் தலையணையை அமுக்கிய மனைவி.. ‘ப்ளூ டிரம்’ கொலையை மிஞ்சிய பாயசக் கொடுமை”..!!

Spread the love

உத்தரப் பிரதேச மாநிலம் பாக்பத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ப்ளூ டிரம் கொலை வழக்கைத் தொடர்ந்து, தற்போது அதே பகுதியில் அரங்கேறியுள்ள “விஷம் கலந்த பாயசம்” கொலைச் சம்பவம் ஒட்டுமொத்தப் பகுதியையும் அதிர வைத்துள்ளது. இன்ஸ்டாகிராம் மூலம் தொடங்கிய ஒரு நட்பு, நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. கள்ளக்காதலனுடன் சேர்ந்து வாழ ஆசைப்பட்ட அந்தப் பெண், தனது கணவனைத் தீர்த்துக்கட்ட ஒரு கொடூரமான திட்டத்தைத் தீட்டியுள்ளார். அதன்படி, வீட்டில் பாயசம் செய்து அதில் விஷத்தைக் கலந்து கணவனுக்குக் கொடுத்துள்ளார். விஷப் பாயசத்தைச் சாப்பிட்டு அந்த நபர் மயக்கமடைந்ததைத் தொடர்ந்து, அந்தப் பெண்ணும் அவரது கள்ளக்காதலனும் சேர்ந்து, தலையணையால் அவரது முகத்தையும் தொண்டையையும் பலமாக அமுக்கி கொடூரமாகக் கொலை செய்துள்ளனர்.

கணவனைக் கொன்ற பிறகு, அந்தப் பெண் மிகவும் சாதுரியமாக நாடகமாடியுள்ளார். விவசாயத்திற்குப் பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லி மருந்தின் தாக்கம் காரணமாகவே தனது கணவர் உயிரிழந்ததாகக் கூறி, அதை ஒரு இயற்கையான மரணம் போலக் காட்ட முயன்றார். ஆனால், உயிரிழந்த நபரின் உடற்கூறாய்வு முடிவுகள் மற்றும் போலீசாரின் தீவிர விசாரணையில், பாயசத்தில் விஷம் வைத்துக் கொலை செய்யப்பட்டது அக்குவேறு ஆணிவேறாக அம்பலமானது. இந்த கொடூரக் கொலை தொடர்பாகக் குற்றவாளியான மனைவியைப் போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ள நிலையில், தப்பியோடிய அவரது கள்ளக்காதலனைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். சமூக ஊடகத்தில் தொடங்கிய ஒரு காதல், இறுதியில் ஒரு குடும்பத்தையே முற்றிலுமாக அழித்து முடிவுக்குக் கொண்டுவந்துள்ளது.

Muthu Mani

Recent Posts

“4 பெண் அமைச்சர்களில் யாருக்கு கலக்?”… தவெக வட்டாரங்களை அதிர வைத்த அமைச்சரவை மாற்ற ரகசியம்…. CM விஜய் எடுக்கப்போகும் அதிரடி முடிவு….!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு ஆட்சியை அமைத்தது. இந்நிலையில், காலியாக…

2 minutes ago

கைத்தடியுடன் கோர்ட்டுக்கு வந்த ஜெம் வீரமணி…. சென்னை POCSO நீதிமன்றத்தில் திடீர் பரபரப்பு…. அடுத்தடுத்த வெளிவரும் திடுக்கிடும் உண்மை….!

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தொழிலதிபர் ஜெம் வீரமணி சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் இன்று…

6 minutes ago

மகளிர் உரிமைத் தொகை நிறுத்தம்…. உடனே இத செக் பண்ணுங்க…. தமிழக அரசு கொடுத்த முக்கிய அப்டேட்….!

மகளிர் உரிமைத் தொகை தொடர்ந்து தடங்கலின்றி கிடைப்பதை உறுதி செய்ய, பயனாளிகள் தங்களின் வங்கி மற்றும் ரேஷன் கார்டு விவரங்களை…

12 minutes ago

“2 குழந்தைகளுடன் வாழ ஆசைப்பட்டேன், ஆனால்…” மத்தவங்க வாழ்க்கையில தலையிடாதீங்க…! மனம் திறந்து பேசிய விஜே ரம்யா…!!

விஜய் தொலைக்காட்சியின் முன்னணித் தொகுப்பாளினியும் நடிகையுமான விஜே ரம்யா, தனது திருமண வாழ்க்கை மற்றும் விவாகரத்து குறித்து முதன்முறையாக மனம்…

14 minutes ago

“அந்த படம் பிடிக்கல… நைட் 2 பெக் போட்டுட்டு கார்த்திக் சுப்பராஜ் காலில் விழுவேன்…” டோரதி வெற்றி விழாவில் அலப்பறை செய்த மிஷ்கின்…!!

இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ், ரிஷிகாந்த், சனந்த் நடிப்பில், இசைஞானி இளையராஜா இசையமைப்பில் வெளியாகி வரவேற்பைப் பெற்று…

28 minutes ago

“தப்பு தப்பா சொல்லட்டுமா…?” ஸ்பா சென்டருக்குள் நுழைந்து மிரட்டிய கும்பல்… பயத்தில் ரூ.1 லட்சத்தை தூக்கி கொடுத்த ஓனர்…. போலீஸ் விசாரணை…!!

கர்நாடக மாநிலம் பெங்களூரு வித்யாரண்யபுரா முதன்மைச் சாலையில் இயங்கி வரும் 'மை சலூன் அண்ட் ஸ்பா' மையத்திற்குள் கடந்த அக்டோபர்…

37 minutes ago