“15 ஆண்டுகால சித்திரவதை…” தப்பியோடிய சிறுவன் மீது காரை ஏற்றி எலும்புகளை நொறுக்கிய கொடூரம்… சோஷியல் மீடியாவில் தீயாய் பரவும் வீடியோ….!!

By Devi Ramu on ஐப்பசி 21, 2026

Spread the love

பெற்ற தாயால் கைவிடப்பட்டு அனாதை இல்லத்தில் வளர்ந்த சிறுவன் ஒருவன், அங்கு ஏற்பட்ட கொடூரச் சித்திரவதைகளிலிருந்து தப்பியோட முயன்றபோது, அவர் மீது காரை ஏற்றிக் கொடூரமாகத் தாக்கிய அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கடந்த 15 ஆண்டுகளாகப் பல்வேறு கொடுமைகளைச் சந்தித்து வந்த அந்தச் சிறுவனை, பயிற்சி அளிப்பதாகக் கூறி அழைத்துச் சென்ற நபர் ஒருவர் கொடூரமாகத் தாக்கியுள்ளார்.

இந்தச் சித்திரவதைகளைப் பொறுக்க முடியாமல் சிறுவன் தப்பியோட முயன்றபோது, தண்டனை அளிப்பதாகக் கூறி அவர் மீது காரை ஏற்றி எலும்புகளை நொறுக்கியுள்ளனர். சிறுவன் பள்ளிக்குச் சென்று படிக்க வேண்டிய வயதில், அனாதை இல்ல ஊழியர்கள் மற்றும் பயிற்சியாளரால் நிகழ்த்தப்பட்ட இந்த மிருகத்தனமான தாக்குதல் குறித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி உலகளவில் பெரும் கொந்தளிப்பையும் கண்டனங்களையும் ஏற்படுத்தியுள்ளது.