லிஃப்ட் கேட்டு ஏறிய பெண்… பேச்சில் தொடங்கிய பழக்கம்… பாலியல் வன்கொடுமையில் முடிந்த சோகம்… நம்பிக்கையை பயன்படுத்தி பெண்ணிடம் அத்துமீறல்…!!

By Gayathri on ஐப்பசி 2, 2026

Spread the love

புதுச்சேரியில் கீரை வியாபாரம் செய்து வரும் 50 வயது பெண் ஒருவரை, இருசக்கர வாகனத்தில் அழைத்துச் செல்வதாகக் கூறி இளைஞர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பெண் தினந்தோறும் நேரு வீதியில் உள்ள பெரிய மார்க்கெட்டுக்குச் சென்று கீரை விற்பனை செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார். சம்பவத்தன்று அவர் தனது வியாபாரத்திற்காக கருவடிக்குப்பம் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தபோது இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

அந்தப் பெண் நடந்து செல்வதைப் பார்த்த இளைஞர் ஒருவர், தானும் அதே பகுதிக்குத் தான் செல்வதாகவும், பார்க்க தனது அம்மாவைப் போல் இருப்பதாகவும் கூறி தனது இருசக்கர வாகனத்தில் ஏறிக்கொள்ளுமாறு அழைத்துள்ளார். அவரது பேச்சை நம்பி பைக்கில் ஏறிய அந்தப் பெண்ணை, மார்க்கெட்டுக்கு அழைத்துச் செல்லாமல் வழியில் உள்ள ஒரு பாழடைந்த கட்டடத்திற்கு அந்த இளைஞர் திசைமாற்றி அழைத்துச் சென்றுள்ளார். அங்கு வைத்து அந்தப் பெண்ணை மிரட்டி கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு அந்த நபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

   

இந்தச் செயலால் கடும் அதிர்ச்சிக்குள்ளான அந்தப் பெண், உடனடியாக புதுச்சேரி பெரியகடை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல் ஆய்வாளர் ஜெய்சங்கர் தலைமையிலான போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில், அந்தப் பெண்ணுக்குப் பாலியல் தொல்லை கொடுத்தது ஜீவானந்தபுரத்தைச் சேர்ந்த தமிழரசன் என்பது கண்டுபிடிக்கப்பட்டு, அவரை போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.