5 வயதில் மகன்.. 2ஆம் திருமணம் செய்த 3 மாதத்தில் 5 மாதம் கர்ப்பமாக இருக்கும் செய்தியை வெளியிட்ட எமி ஜாக்சன்..!

By Nanthini on நவம்பர் 1, 2024

Spread the love

இங்கிலாந்தை சேர்ந்த மாடல் அழகியான எமி ஜாக்சன் தமிழ் சினிமாவில் தற்போது பிரபலமான நடிகையாக மாறிவிட்டார். மாடல் அழகியாக தன்னுடைய வாழ்க்கையை தொடங்கிய இவர் லிவர்பூல் அழகி மற்றும் உலக பதின்வயது அழகி ஆகிய பட்டங்களை வென்றுள்ளார். இவர் கடந்த 2008 ஆம் ஆண்டு அமெரிக்காவின் டாக்சாசில் நடைபெற்ற பதின் வயதில்ருக்கான உலக அழகி போட்டியில் முதல் பரிசு வென்றார். இவர் உலக அளவில் 18க்கும் மேற்பட்ட அழகி விருதுகளை பெற்றுள்ளார். இவர் முதல் முதலில் தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர்களில் ஒருவரான ஏ எல் விஜய் இயக்கிய மதராசப்பட்டினம் திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் நடிகையாக அறிமுகமானார். இந்த திரைப்படத்தில் இவருடைய நடிப்பு ரசிகர்கள் மத்தியில் வெகுவாக பாராட்டப்பட்டது.

Amy Jackson about her son and movie direction : இயக்குனராகும் எமி ஜாக்சன்..  இரண்டாவது காதலை அறிவித்த நிலையில் மகனுக்காக சில விஷயங்களையும்  செய்யபோகிறாராம்..

   

முதல் திரைப்படத்திலேயே ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் திரும்பிப் பார்க்க வைத்த இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் கிடைத்தன. அதனைத் தொடர்ந்து தமிழில் தாண்டவம், ஐ, தங்க மகன், தெறி, 2.0 உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகையாக மாறினார். இப்படி சினிமாவில் பிஸியாக இருந்த இவர் ஜார்ஜ் என்பவருடன் சில காலம் டேட்டிங்கில் இருந்த நிலையில் 2019 ஆம் ஆண்டு நிச்சயதார்த்தம் செய்து கொண்டார். அதே ஆண்டில் செப்டம்பர் மாதம் எமி ஜாக்சனுக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்தது. பின்னர் 2021 ஆம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டார்.

   

Amy Jackson: முடிவில்லாத மகிழ்ச்சி.. இரண்டாவது காதலரை கரம் பிடித்த எமி -  ஜாக்சன்!- இத்தாலி சென்று வாழ்த்திய விஜய்

 

இதனைத் தொடர்ந்து 2022 ஆம் ஆண்டு ஹெட் வெஸ்டவிக் என்ற இங்கிலாந்து நடிகருடன் டேட்டிங் செய்து வந்த எமி ஜாக்சன் கடந்த மார்ச் மாதம் லண்டனில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் தடபுடலான விருந்துடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டார். இதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் மாதம் அவரை திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் எமி ஜாக்சன் இரண்டாவது முறையாக கர்ப்பமாக உள்ள தகவலை அவருடைய கணவர் பகிர்ந்து உள்ளார். அதில் பேபி பம்புடன் இருக்கும் போட்டோவை ஷேர் செய்து எமி ஜாக்சன் 5 மாதம் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்துள்ளார். இதற்கு இணையவாசிகள் வாழ்த்து தெரிவித்த வந்தாலும் சிலர் கணக்கு போட்டு கல்யாணம் ஆகி மூன்று மாதம் தான் ஆச்சு அதுக்குள்ள 5 மாதம் கர்ப்பமா என கேட்டு வருகிறார்கள்.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Amy Jackson Westwick இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@iamamyjackson)

author avatar
Nanthini