#image_title
பிரபல நடிகையான எமி ஜாக்சன் இங்கிலாந்தை சேர்ந்தவர். இவர் மாடல் அழகியாக தனது வாழ்க்கையை தொடங்கினார். கடந்த 2008- ஆம் ஆண்டு அமெரிக்காவின் டாக்சாசில் நடைபெற்ற உலக அழகி போட்டியில் முதல் பரிசை வென்றார். இந்த நிலையில் ஏ.எல் விஜய் இயக்கிய மதராசபட்டினம் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் ஹீரோயினாக தனது பயணத்தை ஆரம்பித்தார். இந்த திரைப்படத்தில் எமி ஜாக்சனின் நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
அதன் பிறகு அவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் குவிந்தது. தமிழில் தாண்டவம், ஐ, தங்க மகன், தெறி, 2.0 உள்ளிட்ட திரைப்படங்களில் எமி ஜாக்சன் நடித்துள்ளார். தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் நடித்து எமி ஜாக்சன் பிரபலமானார். சினிமாவில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்தபோதே ஜார்ஜ் என்பவரை எமி ஜாக்சன் காதலித்தார். கடந்த 2019-ஆம் ஆண்டு எமி ஜாக்சன் ஜார்ஜை நிச்சயம் செய்து கொண்டார்.
இருவரும் டேட்டிங்கில் இருந்ததால் அதே ஆண்டு செப்டம்பர் மாதம் எமி ஜாக்சனுக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்தது. இப்போது எமி ஜாக்சனின் மகனுக்கு 4 வயது ஆகிறது. கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் கடந்த 2021-ஆம் ஆண்டு எமி ஜாக்சன் ஜார்ஜை விட்டு பிரிந்து விட்டார். அதன் பிறகு 2022-ஆம் ஆண்டு ஹெட் வெஸ்டவிக் என்ற இங்கிலாந்து நடிகருடன் எமி ஜாக்சனுக்கு காதல் ஏற்பட்டது. இருவரும் டேட்டிங் செய்து வந்தனர். சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் எமி ஜாக்சன் ஹெட் வெஸ்டவிக் உடன் இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டு வந்தார்.
சமீபத்தில் கூட விமானத்தில் பறந்த படி தனது வருங்கால கணவருடன் லிப் லாக் கொடுத்து ரொமான்ஸ் செய்த புகைப்படங்களை வெளியிட்டார். இந்த நிலையில் திட்டமிட்டபடி இன்று தனது காதலர் ஹெட் வெஸ்டவிக்கை எமி ஜாக்சன் திருமணம் செய்து கொண்டார். அந்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. அதனை பார்த்த ரசிகர்கள் எமி ஜாக்சனுக்கு திருமண வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு இறந்த ஒருவரின் ஆன்மாவை மீட்க அவரது…
சமூக வலைதளங்களில் எப்போது எது வைரலாகும் என்று கணிக்க முடியாத நிலையில், விலங்குகளின் ஒலியைத் துல்லியமாகப் பிரதிபலிக்கும் பிரபல உள்ளடக்க…
அழகாகத் தோற்றமளிக்க வேண்டும் என்ற ஆசையில் மேற்கொள்ளப்படும் அவசரமான மருத்துவ முடிவுகள் எவ்வளவு விபரீதமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்குப் பிரிட்டனைச்…
சென்னை திருவொற்றியூரில் மாம்பழ வியாபாரம் செய்து வரும் மூதாட்டி ஒருவரிடம், பெண் ஒருவர் சிறுவர்கள் விளையாடும் 'டம்மி' 500 ரூபாய்…
மும்பையில் ராபிடோ கார் ஓட்டுநர் ஒருவர், முன்பதிவு செய்த நான்கு பயணிகளை ஏற்ற மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக…
இசை என்பது ஆன்மாவின் மொழி என்பதை மெய்ப்பிக்கும் வகையில், ஆசிரியர் ஒருவர் தனது மாணவர்களுடன் இணைந்து பாடிய மனதை உருக்கும்…