#image_title
தேவதர்ஷினி சென்னையில் பிறந்து வளர்ந்தவர். கல்லூரியில் படிக்கும்போதே தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதன் மூலம் திரையுலகில் நுழைந்தார் தேவதர்ஷினி. பின்னர் தூர்தர்ஷன் தொடரான கனவுகள் இலவசம் என்ற தொடரில் நடிக்க அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.
பின்னர் மர்ம தேசம் என்ற மர்ம தொடரில் அவர் நடித்தார். பின்னர் விடாது கருப்பு என்ற பிரபல தொடரில் நடித்ததன் மூலம் திருப்புமுனையை பெற்றார் தேவதர்ஷினி. தொடர்ந்து 2000 களின் ஆரம்ப காலகட்டத்தில் பல தொடர்களில் நடித்துள்ளார் தேவதர்ஷினி.
தொலைக்காட்சி தொடர்களில் நடித்ததன் மூலமாக சினிமா வாய்ப்பினை பெற்ற தேவதர்ஷினி சினிமாவில் துணை நடிகராகவும் குணச்சித்திர நடிகராகவும் நகைச்சுவை வேடங்களிலும் நடித்து வருகிறார். 2003 ஆம் ஆண்டு பார்த்திபன் கனவு திரைப்படத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் தோன்றியதன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான தேவதர்ஷினி தான் நடித்த முதல் படத்திலேயே சிறந்த நகைச்சுவை நடிகருக்கான தமிழ்நாடு மாநிலத் திரைப்பட விருதை வென்றார் தேவதர்ஷினி.
தொடர்ந்து காக்க காக்க, மழை, கண்ட நாள் முதல், சரவணா, கிரீடம், பிரிவோம் சந்திப்போம், படிக்காதவன், எந்திரன், சகுனி, வீரம், 36 வயதினிலே, காஞ்சனா, சமீபத்தில் ரகு தாத்தா போன்ற கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக திரையுலகில் பணியாற்றியவர் தேவதர்ஷினி.
கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி கீர்த்தி சுரேஷ், எம்.எஸ் பாஸ்கர் ஆகியார் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் ரகுதாத்தா. இத்திரைப்படத்தில் தேவதர்ஷினியும் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் உடன் நடித்த அனுபவங்களை ஒரு நேர்காணலில் பகிர்ந்து கொண்டுள்ளார் தேவதர்ஷினி. அவர் கூறியது என்னவென்றால், நானும் கீர்த்தி சுரேஷ் படப்பிடிப்பில் மிகவும் ஜாலியாக இருப்போம். ரகு தாத்தா படப்பிடிப்பின் முதல் நாள் அன்றே கீர்த்தி சுரேஷ் என்னை பார்த்து நீங்க செம கட்டையா இருக்கீங்கன்னு சொல்லிட்டாங்க என்று கூறி ஜாலியாக பேசியுள்ளார் தேவதர்ஷினி.
ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு இறந்த ஒருவரின் ஆன்மாவை மீட்க அவரது…
சமூக வலைதளங்களில் எப்போது எது வைரலாகும் என்று கணிக்க முடியாத நிலையில், விலங்குகளின் ஒலியைத் துல்லியமாகப் பிரதிபலிக்கும் பிரபல உள்ளடக்க…
அழகாகத் தோற்றமளிக்க வேண்டும் என்ற ஆசையில் மேற்கொள்ளப்படும் அவசரமான மருத்துவ முடிவுகள் எவ்வளவு விபரீதமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்குப் பிரிட்டனைச்…
சென்னை திருவொற்றியூரில் மாம்பழ வியாபாரம் செய்து வரும் மூதாட்டி ஒருவரிடம், பெண் ஒருவர் சிறுவர்கள் விளையாடும் 'டம்மி' 500 ரூபாய்…
மும்பையில் ராபிடோ கார் ஓட்டுநர் ஒருவர், முன்பதிவு செய்த நான்கு பயணிகளை ஏற்ற மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக…
இசை என்பது ஆன்மாவின் மொழி என்பதை மெய்ப்பிக்கும் வகையில், ஆசிரியர் ஒருவர் தனது மாணவர்களுடன் இணைந்து பாடிய மனதை உருக்கும்…