பிக் பாஸ் வீட்டில் அமுதவாணன் மகேஸ்வரி, தனலட்சுமி மற்றும் நிவாஸினிக்கு ராசி பலன்களை கூறியுள்ளார்.
பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி ஆனது பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சம் இல்லாமல் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. 21 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி தற்பொழுது ஜீ பி முத்து, சாந்தி மற்றும் அசல் கோளாறு வெளியேற 18 போட்டியாளர்களுடன் ஒளிபரப்பாகிக் கொண்டுள்ளது.எத்தனை போட்டியாளர்கள் இருந்தாலும் இந்த வீட்டில் சண்டைக்கு மட்டும் பஞ்சமே இல்லை. சண்டைக்கு மட்டுமில்ல நகைச்சுவைக்கும் கூட பஞ்சமில்லை.

தற்பொழுது இன்றைய தினத்திற்கான டாஸ்க்காக ‘ராசி பலன் சொல்லுதல்’ டாஸ்க் இடம்பெற்றுள்ளது. இதில் அமுதவாணன் மகேஸ்வரி, தனலட்சுமி மற்றும் நிவாஸினிக்கு ராசி பலன்களை கூறுகின்றார். அதாவது “மகேஸ்வரி இதற்கு முன்னாடி வாழ்க்கையில் எவ்வளவு கஷ்டம், நஷ்டம் அனுபவிச்சு இருந்தாலும் இனிமேல் அவங்களுக்கு வெற்றி தான்.
எல்லோரும் டாஸ்க் பற்றி கவலைப்பட்டால் இந்த வீட்டுக்குள்ள இவங்க இந்தப் பொட்டியை இன்னைக்கு வைக்கலாமா, நாளைக்கு வைக்கலாமா என்பது தான் அவரது கவலையாக உள்ளது. அதுக்கெல்லாம் நீங்க கவலைப்படாதீங்க. இந்தப் பொட்டியை நீங்க இந்த வீட்டுக்குள்ளேயே வச்சிருக்கலாம்”என்று கூற மஹேஸ்வரி அதைக் கேட்டு விழுந்து விழுந்து சிரிக்கிறார்.

அப்பொழுது மீண்டும் அமுதவாணன், ”சிரிப்பைக் குறைச்சிட்டு கொஞ்சம் சிந்திச்சீங்க என்றால் நல்லா இருக்கும். உங்களுடைய சிரிப்பு தான் உங்களுக்கு பெரிய ஆபத்து” எனக் கூறினார். இதைத்தொடர்ந்து அவர் “ஏழாவது சனி பக்கத்திலேயே இருக்கு, 8ஆவது சனி கூடவே இருக்கு” என மஹேஸ்வரியைப் பார்த்து நக்கலாக கூறினார்.

அடுத்ததாக தனலட்சுமி பற்றி ராசிபலன் கூறுகையில் “தனலட்சுமி எல்லோரும் தன்னோட காலுக்கு கீழ தான் இருக்கணும் என்று நினைப்பாங்க. அதுக்கு காரணம் அவங்க கட்டை விரல் பெரிதாக இருப்பதனால் கூட இருக்கலாம். எவ்வளவு தோல்வி வந்தாலும் அதை வெற்றியாக மாத்தக் கூடியவர்” எனக் கூறினார்.

அடுத்ததாக நிவாஷினி பற்றிக் கூறும் போது “நிவா எப்போதுமே தோல்வியை சந்தித்த அவங்க இனிமேலும் வெற்றியைத் தான் சந்திக்கப் போறாங்க. எப்போதுமே அவங்க போலியை விட அசலைத் தான் நம்புவாங்க.
அந்த அசல் மேலேயே உங்களுக்கு சில நேரம் சந்தேகம் இருக்கலாம். ஆனால் இன்னும் 3மாசத்துல நீங்க அசலாவே வாழ்வீங்க. கூடிய சீக்கிரமே நீங்க அசல் என்ற அந்த வெற்றியை சந்திப்பீங்க” என்று ராசிபலன் என்ற பெயரில் நிவாஸினியை செமையாக கலாய்த்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ….
Antha Tv Rasipalan Amudavavanan part 3#BiggBoss #BiggBossTamil #BiggBossTamil6 pic.twitter.com/ROjqsF01ve
— BIGG BOX TROLL (@drkuttysiva) November 1, 2022
