அழகில் மகளை மிஞ்சும் அம்மா.. குடும்பத்துடன் இளையராஜாவை சந்தித்த அம்மு அபிராமி.. போட்டோ வைரல்..

By santhoshinikarthik on ஆவணி 3, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வர வேண்டும் என்று நினைக்கும் கதாநாயகிகளின் மத்தியில் சிறிய கதாபாத்திரத்திலும் கூட மிகச் சிறப்பாக நடித்து வருகிறார் அம்மு அபிராமி. விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் பங்கேற்று உள்ளார். திரை உலகில் இவர் ராட்சசன் திரைப்படத்தில் நடித்தார்.

   

மேலும் பைரவா படத்திலும் தீரன் அதிகாரம் ஒன்று படத்திலும் தங்கை கதாபாத்திரத்தில் தனது திறமையை காட்டியுள்ளார். இதனைத் தொடர்ந்து அசுரன் படத்தில் தனுஷின் அக்கா மகள் என்ற கதாபாத்திரத்தில் மாரியம்மாளாக நடித்தார். மேலும் கண்ணகி ஹாட்ஸ்பாட் போன்ற படங்களில் தனது திறமையை வெளிக்காட்டி சிறப்பாக நடித்துள்ளார். அம்மா அபிராமி தமிழில் மட்டுமல்ல தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.

   

 

இந்நிலையில் அம்மு அபிராமி கதாநாயகியாக நடித்துள்ள ஜமா திரைப்படம் திரையரங்குகளில் நேற்று வெளியானது .இந்த திரைப்படத்தில் கூத்துப்பட்டறை பின்னணி குறித்த அரசியல் பற்றி மிக தெளிவாக கூறியுள்ளனர். இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று பெற்றுள்ளது. இந்நிலையில் ஜமா திரைபடத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.

 

 

ஆகையால் படக்குழுவினர்கள் இசையமைப்பாளர் இளையராஜாவை சந்தித்து வாழ்த்து பெற்று வந்த நிலையில் அம்மு அபிராமியும் தனது பெற்றோர்களுடன் இளையராஜாவை சந்திக்க சென்றுள்ளனர். அப்பொழுது இளையராஜாவுடன் பெற்றோர்களுடனும் அம்மு அபிராமி புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார். அந்தப் புகைப்படங்கள் இணையதளத்தில் வைரல் ஆகியது. அதை பார்த்த ரசிகர்கள் அம்மு அபிராமியின் அம்மாவை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் இவர் அம்மு அபிராமியை விட அழகாக இருப்பதாகவும் தெரிவித்திருக்கின்றனர்