23வது பிறந்த நாளை பிரம்மாண்டமாக கொண்டாடிய நடிகை அம்மு அபிராமி…. வைரலாகும் க்யூட் புகைப்படங்கள்….!!!!

By Archana

Published on:

தமிழ் சினிமாவில் குணச்சித்திர வேடங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை அம்மு அபிராமி. இவர் ராட்சசன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் சினிமாவில் பிரபலமானார்.

   

அதனைத் தொடர்ந்து தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்தார்.

இந்நிலையில் உலகநாதன் சந்திரசேகரன் இயக்கத்தில் உருவாக உள்ள குதூகலம் திரைப்படத்தில் கதாநாயகனாக பாலமுருகன் அறிமுகமாகிறார்.

இவருக்கு ஜோடியாக நடிக்க அம்மு அபிராமி கமிட்டாகி உள்ளாராம்.

அது மட்டுமல்லாமல் இந்த படத்தில் குக் வித் கோமாளி புகழும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

அது மட்டுமல்லாமல் தமிழைப் போலவே தெலுங்கு சினிமாவிலும் பல திரைப்படங்களில் நடித்து வருகின்றார்.

மேலும் தற்போது பத்து படங்களில் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் சிக்ஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற மூன்றாம் இடத்தை பிடித்தவர்.

இவர் எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக தனது புகைப்படங்களை பதிவிட்டு வருவது வழக்கம்.

தற்போது இவர் தனது 23 வது பிறந்த நாளை அண்மையில் கொண்டாடியுள்ளார்.

தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

author avatar
Archana