தமிழகம், புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டு, அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், கூட்டணிக் குழப்பங்களும் கட்சித் தாவல்களும் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளன. தமிழகத்தில் ஏப்ரல் 23-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், சோளிங்கர் தொகுதியின் முன்னாள் எம்எல்ஏ பார்த்திபன், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திலிருந்து (அமமுக) அதிரடியாக விலகியுள்ளார். தனக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாதது மற்றும் கட்சியின் வெளிப்படைத்தன்மையற்ற செயல்பாடுகளே தனது விலகலுக்குக் காரணம் என அவர் தெரிவித்துள்ளார்.
அரக்கோணத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பார்த்திபன், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்தது தொடர்பாக தினகரன் தொண்டர்களிடம் பொய் கூறுவதாக அவர் குற்றம் சாட்டினார். “நிர்வாகிகளின் விருப்பத்தின் பேரில்தான் பாஜகவுடன் கூட்டணி வைத்ததாக தினகரன் கூறுகிறார், ஆனால் உண்மை அதுவல்ல; டெல்லி மேலிடத்துடன் அவர் என்ன பேசினார் என்பது அவரது மனசாட்சிக்குத்தான் தெரியும்” என்று பார்த்திபன் ஆவேசமாகப் பேசினார்.
மேலும், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லி செல்லும்போது கட்சி நிர்வாகிகளை உடன் அழைத்துச் செல்வதை சுட்டிக்காட்டிய பார்த்திபன், தினகரன் மட்டும் ஏன் ரகசியமாக அமித்ஷாவை சந்திக்கிறார் என்று கேள்வி எழுப்பினார். இதுவரை நடைபெற்ற சந்திப்புகளில் எந்த ஒரு அமமுக நிர்வாகியையாவது அமித்ஷாவிடம் தினகரன் அறிமுகப்படுத்தியதுண்டா என்றும், கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் குறித்து மூத்த நிர்வாகிகளுக்கே எதுவும் தெரியவில்லை என்றும் அவர் அதிருப்தி வெளியிட்டார். புதிதாக அரசியலுக்கு வந்துள்ள தமிழக வெற்றிக் கழகத்துடன் (தவெக) தினகரன் தரப்பு ரகசியமாகப் பேசியதாகவும் அவர் ஒரு புதிய தகவலைப் பகிர்ந்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் பாண்டுரங்கன் போன்ற மூத்த தலைவர்களுக்கும், விசுவாசமான மாவட்டச் செயலாளர்களுக்கும் உரிய தொகுதிகளைப் பெற்றுத் தர தினகரன் தவறிவிட்டதாகக் கூறிய பார்த்திபன், தான் திமுகவில் இணைவதற்காகவோ அல்லது சீட் கிடைக்கவில்லை என்பதற்காகவோ இதைப் பேசவில்லை என்று தெளிவுபடுத்தினார். “இவர்களிடம் பேசி உங்கள் சக்தியை வீணடிக்க வேண்டாம்” எனத் தனது ஆதரவாளர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ள அவர், அமமுகவின் தற்போதைய செயல்பாடுகள் தொண்டர்களுக்கு ஏமாற்றத்தையே அளிப்பதாகக் கூறி விடைபெற்றார்.
அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான கே.ஏ. செங்கோட்டையன் கட்சியிலிருந்து விலகும் மனநிலையில் இருப்பதாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ள…
இ ங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் கெவின் பீட்டர்சன், குருகிராமில் உள்ள மதுக்கடை ஒன்றில் தனது சொந்த…
இந்திய வனத்துறை அதிகாரி பர்வீன் கஸ்வான் பகிர்ந்த, ஒரு நாள் மட்டுமே ஆன காண்டாமிருகக் குட்டியின் நெகிழ்ச்சியான காணொளி இணையத்தில்…
தமிழகத்தில் நடைபெறவுள்ள தேர்தலையொட்டி பாஜக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள (BPL) குடும்பங்களைச் சேர்ந்த மாணவிகளுக்காக…
கேரளாவில் உள்ள 'ஹாஸ்டல் எக்ஸ்ப்' (Hostel Exp) என்ற விடுதியில் தங்கியிருந்த பயணப் பதிவர் அபிமன்யு நந்தல், அங்கு தனக்கு…
ஹரியானா மாநிலம் ஹிசாரில் குடிபோதையில் இருந்த பெண் ஒருவர், சாலையின் நடுவே தனது காரை நிறுத்திவிட்டு ரகளையில் ஈடுபட்ட சம்பவம்…