“தவெக ஆதரவு கடிதத்தில் எனது கையெழுத்து இல்லை” அந்தர் பல்டி அடித்த அமமுக MLA… விஜய் தலையில் விழுந்த பேரிடி..!!

By Soundarya on வைகாசி 9, 2026

Spread the love

“தவெக-விற்கு வழங்கப்பட்ட ஆதரவு கடிதத்தில் எனது கையெழுத்து இல்லை” என்று அமமுக சட்டமன்ற உறுப்பினர் காமராஜ் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார். தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்க உரிமை கோரி வரும் சூழலில், அக்கட்சிக்கு ஆதரவு அளிப்பதாகக் கூறப்பட்ட எம்.எல்.ஏக்களின் பட்டியலில் தனது பெயர் இடம்பெற்றிருப்பதை அவர் வன்மையாக மறுத்துள்ளார். இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன், தவெக சமர்ப்பித்த ஆதரவு கடிதங்களின் நம்பகத்தன்மை குறித்தும் கேள்விகளை எழுப்பியுள்ளது.

காமராஜின் இந்த அதிரடித் திருப்பம், சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கப் போராடும் விஜய் தரப்பிற்குப் பின்னடைவாகக் கருதப்படுகிறது. “எனது அனுமதியின்றி எனது பெயர் பயன்படுத்தப்பட்டுள்ளது, இது தொடர்பாகச் சட்டப்பூர்வமான விளக்கம் அளிக்கத் தயார்” என அவர் கூறியுள்ளது, தவெக கையில் வைத்துள்ள வீடியோ ஆதாரங்களுக்கு எதிரான ஒரு எதிர்-அலையாகப் பார்க்கப்படுகிறது. இதனால் ஆளுநர் எடுக்கும் முடிவில் மேலும் தாமதம் ஏற்படலாம் என்றும், தமிழக அரசியலில் நிலவும் இழுபறி இன்னும் சில நாட்களுக்கு நீடிக்க வாய்ப்புள்ளதாகவும் அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.