திடீர் திருப்பம்… மீண்டும் அதிமுகவில் இணைந்த முக்கிய புள்ளி… செம குஷியில் எடப்பாடி பழனிச்சாமி…!

By Nanthini on கார்த்திகை 3, 2025

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதன்படி அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள நிலையில் இபிஎஸ் மீண்டும் ஆட்சியை அமைப்பதற்கான வேலைகளை செய்து கொண்டிருக்கிறார். ஆனால் இபிஎஸ் மீது கட்சி நிர்வாகிகள் பலரும் அதிருப்தியை வெளிப்படுத்தி வரும் நிலையில் செங்கோட்டையன் உட்பட பலரையும் கட்சியிலிருந்து இபிஎஸ் நீக்கியுள்ளார்.

மறுபக்கம் மாற்று கட்சியினரை தங்கள் கட்சியில் இணைக்கும் பணியிலும் தீவிரம் காட்டி வருகின்றார். இந்நிலையில் அமமுக இளைஞர் பாசறையின் மாநில இணை செயலர் ஆண்டனிராஜ் மீண்டும் அதிமுகவில் இணைந்துள்ளார். தென் சென்னையை சேர்ந்த அவர், அதிமுகவில் ஏற்பட்ட பிளவின் போது டிடிவி தினகரன் அணியில் சேர்ந்தார். அவருக்கு அமமுகவில் முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டது. இப்படியான நிலையில் சென்னையில் இபிஎஸ் தலைமையில் ஆண்டனி ராஜ் அதிமுகவில் இணைந்துள்ளார். அவருக்கு பூங்கொத்து கொடுத்து இபிஎஸ் வரவேற்றார்.