அம்மன் பட வில்லன் நடிகருக்கு இப்படி ஒரு நிலைமையா?.. சிகிச்சைக்கு கூட பணம் இல்லாமல் மோசமான நிலையில் உயிரிழந்த சோகம்..!

Spread the love

பொதுவாகவே திரைத்துறை என்பது ஒரு கானல் நீர் என்பது ஒரு சில பிரபலங்களுக்கு அப்படியே பொருந்தும். சினிமாவில் கொடி கட்டி பறந்த பிரபலங்கள் சிலர் கடைசி காலத்தில் வாழ்வதற்கே மிகவும் சிரமப்பட்டு இறந்து போய் உள்ளனர். அதில் சாவித்திரி மற்றும் சந்திரபாபு போன்ற நடிகர் நடிகைகளும் அடங்குவார்கள். இவர்களைப் போல சினிமாவில் பல திரைப்படங்களில் தன்னுடைய கட்டு மஸ்தான் உடலை காட்டி சொட்டை தலையுடன் பார்வையாலேயே 90ஸ் கிட்ஸ்களை மிரட்டியவர் தான் நடிகர் ராமிரெட்டி. அம்மன் திரைப்படத்தில் இவர் சொல்லும் ச, சண்டா என்ற வார்த்தையை யாராலும் அவ்வளவு சீக்கிரம் மறந்துவிட முடியாது.

தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் என்றாலும் இவருடைய சொந்த ஊர் ஆந்திரா மாநிலம் சித்தூர் தான். முதலில் ஹைதராபாத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி அதன் பிறகு தான் சினிமாவிற்கு வந்தார். சினிமா வாய்ப்பு தேடி தெலுங்கு திரைப்பட கம்பெனிகளுக்கு ஏறு இறங்கிய சமயத்தில் இவருக்கு தெலுங்கில் அனுஷம் என்ற படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்தப் படத்தின் வாய்ப்பை கெட்டியாக பிடித்துக் கொண்டு அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி திரை உலகில் பிரபலமானார். தமிழில் நாடு அதை நாடு என்ற திரைப்படத்தில் தான் இவர் முதல் முதலில் நடித்திருந்தார்.

ஆனால் இவர் பிரபலமானது அம்மன் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தான். இதனைத் தொடர்ந்து துள்ளித் திரிந்த காலம் மற்றும் நெஞ்சினிலே ஆகிய திரைப்படங்களில் மட்டுமே தமிழில் நடித்தார். பிறகு ஹிந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் சில திரைப்படங்களில் நடித்துள்ளார். சுமார் 250க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து ஒரு நடிகராக தன்னுடைய வெற்றியை திரை உலகில் பதிவு செய்திருந்தாலும் தயாரிப்பாளராகவும் இயக்குனராகவும் இவர் எடுத்த மற்றும் தயாரித்த படங்கள் அனைத்தும் தோல்வியை தான் சந்தித்தது.

பிறகு தனது உடல் நலத்திலும் இவர் சில பிரச்சனைகளை சந்தித்தார். அதாவது தன்னுடைய இறுதி நாட்களில் சிகிச்சைக்கு கூட பணம் இல்லாமல் கல்லீரல் பிரச்சனை காரணமாக பாதிக்கப்பட்டிருந்த இவர் மிகவும் உடல் மெலிந்து ஆளை அடையாளம் தெரியாமல் மாறி 52 வயதில் காலமானார். இவருக்கு இரண்டு ஆண் குழந்தைகள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். சினிமாவில் பல திரைப்படங்களில் வில்லனாக மிரட்டி கலக்கிய இவர் கடைசி காலத்தில் கல்லீரல் பிரச்சனையால் உடல் மெலிந்து கவனித்துக் கொள்ள ஆளில்லாமல் சிகிச்சைக்கு கூட பணம் இல்லாமல் மரணம் அடைந்தார். இவர் சிகிச்சைக்கு கூட பணம் இல்லாமல் உயிரிழந்த சோகம் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Nanthini

Recent Posts

“விஜய் அலையில் காணாமல் போன சீமான்!… நாதக வேட்பாளர்கள் 234 பேரும் டெபாசிட் இழப்பார்களா?… அதிர்ச்சி தரும் தேர்தல் முடிவுகள்”..!!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், நடிகர் விஜய்யின் அரசியல் வருகையால் உருவான பெரும் அலையில் நாம்…

3 minutes ago

“9-வது முறையாக அசுர சாதனை!… திமுக, அதிமுக-வை பின்னுக்குத் தள்ளிய தவெக… கோபிசெட்டிபாளையத்தில் தவெக வேட்பாளர் செங்கோட்டையன் அபார வெற்றி”…!!!

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) வேட்பாளர் செங்கோட்டையன் சுமார் 13,000 வாக்குகள் வித்தியாசத்தில் அபார…

13 minutes ago

“சரித்திர வெற்றிக்கு வாழ்த்துகள் அண்ணா!”… தமிழக அரசியலில் தவெக-வின் விஸ்வரூபம்!… ஜி.வி.பிரகாஷ் எக்ஸ் தளத்தில் நெகிழ்ச்சி பதிவு…!!!

தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகி வருகின்றன. இதில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) கட்சி,…

22 minutes ago

“விஜய்யின் விஸ்வரூபம்…110 இடங்களை தட்டித்தூக்கிய தவெக… தனி ஆளாக நின்று சாதித்த விஜய்… எஸ்.ஏ.சி சொன்ன அந்த ரகசியம்”…!!!

தமிழகத்தில் உள்ள 234 சட்டசபை தொகுதிகளுக்கும் கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இன்று காலை…

35 minutes ago

அதிமுக-வா? காங்கிரஸா?… மெஜாரிட்டி மிஸ்ஸானால் தளபதியின் அடுத்த மூவ் என்ன?… கூட்டணி ஆட்சிக்கு விஜய் சம்மதிப்பாரா? … ஒரு விரிவான அலசல்”..!!!

தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு திருப்பமாக, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தனது முதல்…

49 minutes ago

“தமிழக அரசியலில் ‘தளபதி’ ஆதிக்கம்!… முதலிடத்தை பிடிக்கும் தவெக… கொண்டாட்டத்தில் இறங்கிய விஜய் ரசிகர்கள் மற்றும் குடும்பத்தினர்”…!!!

தமிழக சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம்…

58 minutes ago