அதிமுக – பாஜக கூட்டணியில் திடீர் பரபரப்பு… அமித்ஷா எடுத்த அதிரடி முடிவு… யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்….!

Spread the love

தமிழகத்தில் அடுத்த வருடம் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை நோக்கி அனைத்து கட்சிகளும் பயணித்துக் கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் தேர்தலில் வெற்றி பெற பல வியூகங்களை வகுத்து வருகிறது. அதேபோல அந்தந்த கட்சியை சேர்ந்த நிர்வாகிகளும் வருகின்ற தேர்தலில் போட்டியிட எம்எல்ஏ சீட் வாங்குவதற்கும் காய்களை நகர்த்தி வருகின்றன. அதன்படி அதிமுக கூட்டணியில் உள்ள பாஜகவின் தலைவர்களும் எம்எல்ஏ சீட் பெற பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். இந்நிலையில் பாஜகவில் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுபவர்களை நேரடியாக அமித்ஷா தேர்ந்தெடுப்பார் என்று புதிய தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட பாஜகவிற்கு 20 இடங்களில் போட்டியிட்டு நான்கு சட்டமன்ற உறுப்பினர்களை பெற்றிருந்தது. பிறகு 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின் போது அதிமுக மற்றும் பாஜக கூட்டணி இரண்டாக உடைந்தது. அதிமுக மற்றும் தேமுதிக இணைந்து தேர்தலை சந்தித்தது. பாஜக, பாமக, அமமுக, ஓபிஎஸ் அணி மற்றும் இதர கட்சிகளுடன் இணைந்து பாஜக தேர்தலை சந்தித்தது.

இந்த தேர்தலில் பாஜக தனித்து நான்கு தொகுதிகளும் கூட்டணியாக எட்டு தொகுதிகளும் வரை வெற்றி பெறும் என பாஜகவின் டெல்லி தலைமை கணக்கு போட்டு இருந்தது. ஆனால் பாஜக கூட்டணி ஒரு இடங்களில் கூட வெற்றி பெறவில்லை. இதனால் இந்த முறை நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுபவர்களில் பெரும்பாலானோர் வெற்றி பெற வேண்டும் என்று டெல்லி தலைமை நினைப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்போதே டெல்லி தலைமையிடம் சீட் பெறுவதற்காக பல மூத்த தலைவர்கள் காய் நகர்த்தி வருகிறார்கள்.

இந்த முறை வேட்பாளர்கள் தேர்வில் டெல்லி தலைமையின் நேரடி பார்வை இருக்கும் என அமித்ஷா தெரிவித்துள்ளாராம். வெற்றி வாய்ப்பு உள்ள தொகுதிகளை அதிமுகவிடம் கேட்டு பெற்று அதன் மூலம் அந்த தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு உள்ளவர்கள் குறித்து தகவல் சேகரிக்கும் பணி நடைபெற்று வருவதாக தெரிகிறது. வெற்றி வாய்ப்பு உள்ளவர்களுக்கு மட்டுமே தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்க அமித்ஷா முடிவெடுத்து இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் டெல்லியை தொடர்பு மூலம் எம்எல்ஏ சீட்டு கிடைத்துவிடும் என எதிர்பார்த்து இருந்தவர்கள் சற்று கலக்கத்தில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Nanthini

Recent Posts

BREAKING: கனிமவளங்கள் கடத்தல்.. முதல்வர் விஜய்யின் அதிரடி உத்தரவு…!!

தமிழகத்தில் சட்டவிரோதமாக கனிமவளங்கள் கடத்தப்படுவதைத் தடுப்பதற்குத் தேவையான கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.…

2 மணத்தியாலங்கள் ago

பறவையே உஷார்… “இது வாலு இல்ல, மரண வில்லன்” – நெட்டிசன்களை அதிரவைத்த வைரல் வீடியோ… அம்மாடியோ பயங்கரமா இருக்கே..!!

ஈரானியப் பாலைவனத்தின் பாறைகளுக்கு மத்தியில் காணப்படும் அரிய வகை பாம்பான 'சிலந்தி வால் கொம்பு விரியன்' (Spider-tailed horned viper),…

2 மணத்தியாலங்கள் ago

இரத்தக் கடலாக மாறிய கடற்கரை.. பாரம்பரியம் என்ற பெயரில் 700 திமிங்கிலங்கள், டால்பின்கள் கொடூர வேட்டை… உலகையே உலுக்கிய கொடூரம்..!!

ஃபாரோ தீவுகளில் (Faroe Islands) ஆயிரம் ஆண்டுகள் பழமையான பாரம்பரிய வழக்கமான 'கிரைண்டாட்ராப்' (Grindadráp) என்ற நிகழ்வின்படி, 700-க்கும் மேற்பட்ட…

2 மணத்தியாலங்கள் ago

“இனி இப்படித்தான்” வங்கிகளில் கோல்டு லோன்… RBI வங்கியின் அதிரடி அறிவிப்பு..!

வங்கிகளில் தங்கக் கடன் (Gold Loan) பெறுவதற்கான வரம்புகளை இந்திய ரிசர்வ் வங்கி (RBI) மாற்றியமைத்துள்ளது. இத்துடன் தங்கத்தின் மதிப்பீட்டை…

2 மணத்தியாலங்கள் ago

பாவம்..! நடுரோட்டுல அனாதையா நிக்குறாரு விஜயபாஸ்கர்..எங்கே போறதுன்னு தெரியாம… திமுக அமைச்சர் ரகுபதி உருக்கம்..!!

தமிழகத்தில் தவெக ஆட்சி அமைக்க ஆதரவளிக்க முயன்ற அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீண்டும் எடப்பாடி பழனிசாமி அணிக்குத் திரும்பியுள்ள நிலையில்,…

2 மணத்தியாலங்கள் ago

டிவி சேனல் தொடங்கும் முதல்வர் விஜய்… நிதி மற்றும் நிர்வாகப் பொறுப்பில் ஆதவ் அர்ஜுனா..!!

தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) தலைவரும், தமிழக முதலமைச்சருமான விஜய், தனது கட்சியின் கொள்கைகளையும், மக்கள் நலத் திட்டங்களையும் மாநிலம்…

2 மணத்தியாலங்கள் ago