டெல்லியில் வெடித்த சர்ச்சை.! முதலமைச்சர் விஜய்யை சந்திக்க அமித்ஷா மறுப்பு..? மத்திய அமைச்சகம் கொடுத்த அதிரடி விளக்கம்..!!

By Soundarya on வைகாசி 28, 2026

Spread the love

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அரசுமுறைப் பயணமாக டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து மாநில நலன் சார்ந்த கோரிக்கைகளை முன்வைத்தார். இதனைத் தொடர்ந்து, அவர் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் சந்திக்கத் திட்டமிட்டிருந்தார். ஆனால், அந்தச் சந்திப்பு நடைபெறாததால், அமித்ஷா தமிழக முதலமைச்சரைச் சந்திக்க மறுத்துவிட்டு, அதே நேரத்தில் கேரள முதலமைச்சர் சதீசனைச் சந்தித்ததாக அரசியல் வட்டாரங்களில் பெரும் சர்ச்சை வெடித்தது.

இந்த விவகாரம் குறித்துப் பரவிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மத்திய உள்துறை அமைச்சகம் தற்போது அதிகாரப்பூர்வ விளக்கம் அளித்துள்ளது. அமித்ஷா முன்கூட்டியே திட்டமிட்டபடி குஜராத் மாநிலத்திற்குப் பயணம் மேற்கொள்ள வேண்டியிருந்ததால் மட்டுமே, இந்தச் சந்திப்பிற்குத் தற்காலிகமாக நேரம் ஒதுக்க இயலவில்லை என்றும், மற்றபடி சந்திப்பு ரத்து செய்யப்படவில்லை என்றும் தெளிவுபடுத்தியுள்ளது.