திடீர் டுவிஸ்ட்…! விஜய்யுடன் கூட்டணி…? முடிவை அறிவித்த அமித்ஷா… அரசியலில் பெரும் பரபரப்பு…!!

By Soundarya on ஐப்பசி 30, 2025

Spread the love

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக களத்தில் இறங்கி பணியாற்றி வரும் நிலையில் அதிமுக மற்றும் திமுக இடையே போட்டி என்ற நிலை மாறி தற்போது விஜயும் களத்தில் இறங்கியுள்ளதால் 2026 தேர்தல் களம் பரபரப்பாக பார்க்கப்படுகிறது.  இதற்கிடையில் கரூரில் நடந்த துயருக்கு பிறகு, அதிமுக, பாஜக கட்சிகள் தவெக-வுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறது.

இதனால் NDA கூட்டணியில் விஜய் இணையவுள்ளதாக கூறப்பட்டது. இந்த நிலையில், விஜய்யை NDA-வில் இணைப்பது குறித்து, கூட்டணி கட்சி தலைவர்களுடன் ஆலோசித்த பிறகு முடிவெடுக்கப்படும் என்று அமித்ஷா தெரிவித்துள்ளார். தமிழகத்தில் NDA கூட்டணியை விரிவுபடுத்த விரும்புவதாகவும் அவர் கூறினார். எனவே இது விஜய்யுடனான கூட்டணியை கிட்டத்தட்ட உறுதி செய்துள்ளதாகவே சொல்லப்படுகிறது.