அதிமுகவை முழுமையாக அழிக்க சதி செய்கிறார் அமித்ஷா… அதிமுகவில் பரபரப்பை கிளப்பிய மாணிக்கம் தாகூர் எம்பி…!!

By Soundarya on புரட்டாதி 16, 2025

Spread the love

2026 ஆம் ஆண்டு தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு  வரும் நிலையில் அதிமுகவில் பனிப்போர் நீடித்து வருகிறது. அதிமுக ஒருங்கிணைப்பு விவகாரத்தில் செங்கோட்டையனை கட்சியிலிருந்து நீக்கிவிட்டார். அதிமுக 210 தொகுதிகளில் வெற்றி பெறுவது உறுதி என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அதிமுக ஆட்சியை காப்பாற்றியது மத்தியில் ஆட்சியில் இருந்த பாஜக தான். அந்த நன்றியை தான் எப்போதும் மறக்க மாட்டேன். ஆட்சியை காப்பாற்றிக் கொடுத்தது பாஜக என்பது புரிகிறது என்று நேற்று EPS கூறியிருந்தார்.

இன்று எடப்பாடி அமித்ஷாவை சந்திக்க டெல்லிக்கு விரைந்துள்ளார். அங்கு அவருக்கு அமோக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. அமித்ஷாவை சந்தித்த பிறகு தான் என்ன முடிவு எடுக்கப்போகிறார் என்பது தெரியும். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த மாணிக்கம் தாகூர் எம்பி, “அதிமுகவை முழுமையாக அழிக்கும் வேலையை அமித்ஷா செய்து வருகிறார்” என்று புதிய குண்டை தூக்கி போட்டுள்ளார்.