அதிமுகவை கைப்பற்ற போட்ட ஸ்கெட்ச்… ஒரே அடியில் காலி செய்த அமித்ஷா…. அதிர்ச்சியில் எடப்பாடி….!

By Nanthini on ஆவணி 11, 2026

Spread the love

திருவண்ணாமலை பயணத்திற்காக சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்துப் பேசினார். தமிழகம் வந்த அமித்ஷாவைச் சந்திக்க எடப்பாடி பழனிசாமி பலமுறை முயற்சி செய்த பின்னரே இச்சந்திப்பு சாத்தியமானதாகக் கூறப்படுகிறது. இச்சந்திப்பின் போது, கட்சியைத் தன் முழு கட்டுப்பாட்டில் கொண்டுவர உதவ வேண்டும் என்றும், தனக்குத் தங்களது ஆதரவு தேவை என்றும் அமித்ஷாவிடம் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார். இருப்பினும், “இது அதிமுகவின் உள்கட்சி விவகாரம் என்பதால் நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள்; இதில் நாங்கள் தலையிட விரும்பவில்லை, எங்களால் எந்த உதவியும் செய்ய முடியாது” எனக் கூறி அமித்ஷா உதவ மறுத்துவிட்டதாகத் தெரிகிறது. இதனால் எடப்பாடி பழனிசாமி மிகுந்த அதிருப்தியடைந்துள்ளதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதேவேளையில், இச்சந்திப்பில் வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல் குறித்தும் இரு தலைவர்களும் சுமார் 15 நிமிடங்கள் தீவிரமாக விவாதித்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அப்போது, வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்குக் கட்சியை உடனடியாகத் தயார்படுத்துமாறு எடப்பாடி பழனிசாமிக்கு அமித்ஷா அறிவுறுத்தியுள்ளார். மேலும், புதிதாக உருவாகியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கூட்டணிக்கு எதிராகத் தேர்தலில் ஒரு வலுவான கூட்டணியை அமைத்துச் செயல்பட வேண்டும் என்றும் அமித்ஷா இச்சந்திப்பின் போது வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது.