பரபரப்பு..! ஜனநாயகன் லீக் வீடியோவில் இருக்கும் அந்த வார்த்தை.. உண்மையான குற்றவாளி இவர்தான்… ஆதாரத்துடன் பொங்கிய இயக்குநர் அமீர்…!!

By Soundarya on சித்திரை 12, 2026

Spread the love

திரைப்படங்கள் இணையதளத்தில் கசிவது குறித்துப் பேசியுள்ள இயக்குநர் அமீர், படத்தை இணையதளத்தில் பார்ப்பவர்களை விட, அதை முதலில் வெளியே கசிய விடுபவனே முதன்மையான குற்றவாளி என்று சாடியுள்ளார். பொதுவாகத் தணிக்கைக் குழுவிலிருந்து ஒரு படம் கசிந்தால், அதில் ‘CENSOR_COPY’ என்ற அடையாளக் குறியீடு (Watermark) இருக்கும் என்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதன் மூலம் படம் எங்கே இருந்து கசிந்தது என்பதை எளிதாகக் கண்டறிய முடியும் என்று அவர் விளக்கினார்.

தற்போது கசிந்துள்ள லீக் வீடியோவில் ‘EDIT_REF’ என்று குறிப்பிடப்பட்டுள்ளதை ஆதாரமாகக் காட்டிய அமீர், இந்தப் படம் எடிட்டிங் அறையிலிருந்தே கசிந்திருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். எனவே, அந்தத் திரைப்படத்தின் எடிட்டரே இந்தக் கசிவுக்கு முழுப் பொறுப்பானவர் என்றும், அவரே இந்தப் பிழையைச் செய்த குற்றவாளி என்றும் தனது கருத்தை ஆணித்தரமாகப் பதிவு செய்துள்ளார்.